டிசம்பர் 18 முதல் விற்பனைக்கு வரும் ஆவினின் புதிய வகை பால்!! அப்படி என்ன இருக்கு!!

Photo of author

By Gayathri

தமிழ்நாட்டில் உள்ள ஆவின் பால் உற்பத்தி மற்றும் விநியோக நிறுவனம் சார்பில் ஏற்கனவே தமிழ்நாட்டில் கிரீன், ப்ளூ, ஆரஞ்சு போன்ற பல்வேறு நிறங்களில் செறிவூட்டப்பட்ட மற்றும் அதிக செறிவூட்டப்பட்ட பால் பாக்கெட்டைகள் வினியோகம் செய்யப்படுகின்றன.

இவை மட்டுமின்றி பால் சம்பந்தப்பட்ட பொருட்களான நெய், பாலாடைக்கட்டி, ஐஸ்கிரீம் மற்றும் இனிப்புகள் போன்ற பல பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு விநியோகமும் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அவன் நிறுவனம் புதிய வகையான ஆவின் பாலை அறிமுகம் செய்ய உள்ளது. இது தொடர்பாக மேலாண் இயக்குனர் வெளியிட்ட செய்தி குறிப்பு தெரிவித்திருப்பதாவது :-

தமிழ்நாடு முழுவதும் நாள் ஒன்றுக்கு சுமார் 31 லட்சம் லிட்டர் பால் மற்றும் மாதம் ஒன்றுக்கு சுமார் 50 கோடி ரூபாய் மதிப்பிலான பால் பொருட்கள் எந்தவித தடையும் இன்றி பொதுமக்களை சென்றடைகிறது என்று தெரிவித்தார்.

என் நிலையில் பால் மற்றும் பால் உபப்பொருட்களின் தேவை மேலும் அதிகரித்த வண்ணம் உள்ளதால் விற்பனை நிலையங்களை அதிகரிக்க, மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் மற்றும் சுற்றுலா பகுதிகளிலும் ஆவின் பாலகம் அமைக்க தற்பொழுது பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் மேலாண் இயக்குனர் தெரிவித்திருக்கிறார்.

பொதுமக்களின் தேவை அதிகரிப்பதால் அவர்களின் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக பல்வேறு புதிய பால் மற்றும் பால் உபப்பொருட்களை அறிமுகம் செய்து வருவதாகவும், இந்நிலையில் தான் ஆரோக்கியத்திற்கு ஏற்ற வகையில் வைட்டமின் A மற்றும் D சரி ஊட்டப்பட்ட புதிய வகையான கிரீன் மேஜிக் பிளஸ் பால் காஞ்சிபுரம் திருவள்ளூர் கோயம்புத்தூர் மற்றும் சேலம் ஒன்றியங்களில் வருகிற டிசம்பர் 18ஆம் தேதி முதல் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறார்.