அடிவயிறு கொழுப்பு வெண்ணெய் போல் கரைய.. இந்த ஒரு பானம் போதும்!!

Photo of author

By Gayathri

உடலில் சதைகள் தொங்காமல் இருக்க கடுமையான உணவு கட்டுப்பாட்டை பின்பற்றுபவர்கள் ஏராளம்.முன்பெல்லாம் 30 வயதை கடந்தால் வயிற்றில் தொப்பை எட்டி பார்க்கும்.ஆனால் இப்பொழுது சிறு வயதிலேயே உடல் பெருத்து தொந்தி காணப்படுகிறது.இதற்கு காரணம் நாம் பின்பற்றும் உணவுமுறை பழக்கங்கள்.

இக்காலத்து குழந்தைகளுக்கு பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் தின்பண்டங்கள் மீதே மோகம்.உணவை தவிர்த்துவிட்டு நாள் முழுவதும் தின்பண்டங்களை அசை போடுவதால் உடலில் தேவையற்ற கொழுப்புகள் சேர்க்கிறது.

பெரியவர்கள் கொழுப்பு உணவுகள்,பாஸ்ட்புட்,ஜங்க் புட் போன்றவற்றை விரும்பி உண்கின்றனர்.இதனால் கடுமையான நோய் பாதிப்பிற்கு ஆளாகி வருகின்றனர்.குறிப்பாக உடல் பருமன் ஒரு பெரும் பிரச்சனையாகவே மாறியுள்ளது.

உடலில் வயற்று பகுதியில் மட்டும் அதிகளவு கொழுப்பு சேர்ந்து தொப்பையாக உருவெடுக்கிறது.இதை குறைக்க முடியாமல் பலரும் திணறி வருகின்றனர்.இந்த தொப்பை கொழுப்பை குறைக்க தினமும் காலை நேரத்தில் இளம் வெயிலில் அரை மணி நேரம் நடை பயிற்சி செய்ய வேண்டும்.

காலை நேரத்தில் சில பானங்களை பருகுவதால் தொப்பை கொழுப்பு எளிதில் குறையும்.அந்த வகையில் உடல் எடையை குறைக்கும் பானம் சிலவற்றை இங்கு பார்ப்போம்.

1)எலுமிச்சை நீர்

ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு எலுமிச்சம் பழத்தின் சாறை பிழிந்து பருகி வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் அனைத்தும் கரைந்துவிடும்.வெது வெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து பருகினால் உடல் எடை கட்டுக்குள் இருக்கும்.

2)சீரக நீர்

இரவில் தண்ணீரில் சீரகத்தை ஊறவைத்து மறுநாள் காலையில் அதை வடிகட்டி பருகி வந்தால் உடலில் கெட்ட கொழுப்பு சேர்வது கட்டுப்படும்.