தற்காலிக முறையை நீக்கி நிரந்தர பணி நியமனங்களே தொடரும்! தமிழக அரசை பாராட்டிய பாமக தலைவர்!

0
211
Abolish temporary system and permanent appointments will continue! Bamaka leader praised the Tamil Nadu government!
Abolish temporary system and permanent appointments will continue! Bamaka leader praised the Tamil Nadu government!

தற்காலிக முறையை நீக்கி நிரந்தர பணி நியமனங்களே தொடரும்! தமிழக அரசை பாராட்டிய பாமக தலைவர்!

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் தமிழக அரசுக்கு, அரசின் மனித வளத்துறை ஆனது சமூகநீதிக்கு எதிராக உள்ளது என அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அந்த அறிக்கையில் வைத்த கோரிக்கைகளை ஏற்று தற்போது தமிழக அரசு, மனித வளத்துறை  சீர்திருத்த குழுவின் ஆய்வு வரம்புகளை ரத்து செய்துள்ளது. தற்பொழுது இது குறித்து மீண்டும் பாமக தலைவர் தனது ட்விட்டரில் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது,

தமிழக அரசுப் பணிகளுக்கான ஆள்தேர்வு மற்றும் பயிற்சிகளில் மாற்றம் செய்தல், குத்தகை முறையில் பணியாளர்களை பெறுவது ஆகியவை குறித்து அரசுக்கு பரிந்துரைப்பதற்கான மனிதவள சீர்திருத்த குழுவின் ஆய்வு வரம்புகள் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது

தமிழக அரசின் மனிதவளத்துறை இது குறித்து வெளியிட்ட அரசாணை எண் 115 சமூகநீதிக்கு எதிராக இருப்பதை சுட்டிக்காட்டி அறிக்கை வெளியிட்டிருந்தேன். அதில் உள்ள நியாயங்களை உணர்ந்தும், அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்றும் முதலமைச்சர் உடனடியாக செயல்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது

அதே நேரத்தில் ஆய்வு வரம்புகளை மாற்றுவது மட்டுமே இந்த சிக்கலுக்கு தீர்வாகி விடாது. மனிதவள சீர்திருத்தக் குழு அமைக்கப்படுவதன் நோக்கம் நிரந்தர பணி நியமனங்களை நிறுத்தி விட்டு, தற்காலிக, ஒப்பந்த முறை நியமனங்களை ஊக்குவிப்பது தான் என்றால் அந்த சமூக அநீதியை ஏற்க முடியாது

நிரந்தர பணி நியமனங்களே தொடரும்; தற்காலிக, ஒப்பந்த முறை நியமனங்கள் அனுமதிக்கப்படாது என்று அரசு கொள்கை அறிவிப்பு வெளியிட வேண்டும். அதற்கு வாய்ப்பில்லை என்றால் சமூக நீதிக்கு எதிராக அமைக்கப்பட்டுள்ள மனிதவள சீர்திருத்தக் குழுவை கலைக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்

இந்த பதிவில் நிரந்தர பணி என்பதை தமிழக அரசு கொண்டு வர வேண்டும்.அதனைவிட்டு மனிதவள குழு அமைத்து அதன் விதிமுறைகளை மாற்றி அமைத்தல் எனபது அநீதியாகும்.அதனால் ஒப்பனதமுறை என்பதை நிறுத்திவிட்டு நிரந்தர பணி என்பதை தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Previous articleஇந்தியா சீனா எல்லை பகுதியில் திடீர் பதற்றம்! தயார் நிலையில் இந்திய ராணுவம்!
Next articleஉயிருடன் தாயை புதைத்த மகன்! விழுப்புரம் அருகே பரபரப்பு!