உயிருடன் தாயை புதைத்த மகன்! விழுப்புரம் அருகே பரபரப்பு!

உயிருடன் தாயை புதைத்த மகன்! விழுப்புரம் அருகே பரபரப்பு!

விழுப்புரம் மாவட்டம் ,கண்டாச்சிபுரம் அடுத்த வீ. சித்தாமூர் பகுதியில் வசித்துவரும் சக்திவேல் (வயது 45). இவர் பிளாஸ்டிக் வேஸ்ட் குப்பைகளை சேகரிக்கும் வேலை செய்து வருகிறார்.இவருக்கு திருமணம் ஆகி மூன்று மகள்கள் ஒரு மகன் இருக்கிறார்கள். இவர் வேலைக்கு செல்லாத போது தன் தாய் அசோதையிடம் மது அருந்த பணம் வாங்கி செல்வது வழக்கம்.

இந்நிலையில் நேற்று இரவு வீட்டுக்கு சென்ற சக்திவேல் குடிபதற்கு பணம் கேட்டுள்ளார். இதற்கு தாய் அசோதை (வயது 75) தர மறுத்துள்ளார்.அங்குயிருந்து சென்ற சக்திவேல் இரவு சுமார் 11மணியளவில் மதுபோதையில் வீட்டிற்கு வந்து தாய் அசோதையிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது, ஆத்திரமடைந்த சக்திவேல், தாய் அசோதையை தாக்கியதில் அவர் மயக்கம் அடைந்தார்.

மதுபோதையில் இருந்த சக்திவேல் தாய் இறந்துவிட்டார் என்று கறுதி வீட்டின் பின்புறத்திலேயே பள்ளம் தோண்டி புதைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.இது அறிந்த பொது மக்கள் , அரகண்டநல்லூர் காவல் துறைக்கு தகவல் அறிவித்தனர் .இதை தொடர்ந்து அங்கு விரைந்த அரகண்டநல்லூர் காவல் ஆய்வாளர் சித்ரா மற்றும் போலீசார் சென்று மதுபோதையில் இருந்த சக்திவேலை கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பின்பு அசோதை உடலை தோண்டி எடுத்து முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.