தலைமறைவாக உள்ள நித்தியானந்தா இறந்துவிட்டாரா? சகோதரி மகன் அதிர்ச்சி வீடியோ!

Photo of author

By Vijay

தலைமறைவாக உள்ள நித்தியானந்தா இறந்துவிட்டாரா? சகோதரி மகன் அதிர்ச்சி வீடியோ!

Vijay

இந்தியாவில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய ஆன்மிக குரு நித்தியானந்தா, 2019 ஆம் ஆண்டு குஜராத்தில் பதிவான ஒரு வழக்கில் போலீசாரின் தேடுதல் வேட்டையிலிருந்து தப்பிக்க இந்தியாவை விட்டு வெளியேறினார். பின்னர், தென் பசிபிக் கடலில் ஒரு தனியார் தீவை கைலாசா என்ற பெயரில் அறிவித்து, அதை தனி நாடாகவும் பிரகடனம் செய்தார். இதற்கிடையில், ஆன்மிக சொற்பொழிவுகள், பத்திரிகை செய்திகள், மற்றும் சமூக ஊடகங்களின் மூலம் தொடர்ந்து வெளியேறி வந்த அவர், கடந்த சில ஆண்டுகளாக காணாமல் போய்விட்டார்.

2022 ஆம் ஆண்டு மே மாதத்தில், நித்தியானந்தா உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார் என தகவல்கள் பரவின. ஆனால் அதற்கு பதிலாக அவர், “நான் இறக்கவில்லை, சமாதி நிலையை அடைந்துள்ளேன். 27 மருத்துவர்கள் எனது உடலின் பிரபஞ்ச சக்திகளை ஆய்வு செய்கின்றனர்” என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்குப் பிறகு, அவரது காணொளிகள் மிகவும் குறைவாகவே வெளியாகின. சில வீடியோக்கள் வந்தாலும், அவை பழையவையாகவே இருந்தன.

இதற்கிடையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, நித்தியானந்தா மரணமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது சகோதரி மகன் சுந்தரேஸ்வரன், ஆன்மிக சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருந்த போது, “சாமி ஹிந்து தர்மத்தை காப்பாற்ற உயிர் தியாகம் செய்துவிட்டார்” என பக்தர்களுக்கு அறிவித்தார்.

இந்த தகவல் உண்மையானதா? அல்லது இது போலீஸ் விசாரணையில் இருந்து தப்பிக்க நித்தியானந்தாவின் புதிய நாடகமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில், கடந்த சில ஆண்டுகளாக அவர் தொடர்பைத் தவிர்த்து வந்ததோடு, கைலாசா நாட்டின் நிலவரம் பற்றிய எந்த உறுதியான தகவலும் கிடைக்கவில்லை.

நித்தியானந்தாவின் மரணம் உண்மையானதென்றால், அவருடைய ரூ.4,000 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் யார் வசம் செல்லும்? இது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. பலரும் நடிகை ரஞ்சிதா, நித்தியானந்தாவின் மிக நெருங்கியரானவர் என்பதால், அவர் இந்த சொத்துக்களை நிர்வகிக்க வாய்ப்புள்ளது என கருதுகின்றனர். அதேசமயம், கைலாசா நாட்டின் நிர்வாகத்தினர், அல்லது அவருடைய குடும்பத்தினரும் இதில் உரிமை கோரலாம்.

இந்த மர்ம மரணம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள், “இந்த தகவல் உண்மையா? அல்லது இது ஒரு தப்பிக்கும் திட்டமா?” என்பதைக் கண்டறிய முயலுகின்றனர். ஏற்கனவே இந்தியாவில் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு எதிராக நித்தியானந்தா மீது வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பதால், அவருடைய மரணம் உண்மையாக இருந்தால் கூட, அவருடைய சொத்துக்கள் மீதான உரிமை தொடர்பாக பல சிக்கல்கள் உருவாகும் என்பதே நிச்சயம்.