கோடை வெயிலை சமாளிக்க போக்குவரத்து காவலர்களுக்கு ஏசி ஹெல்மெட்..அரசின் அசத்தலான ஐடியா..!!
இந்த ஆண்டு கோடை வெயில் கடுமையாக கொளுத்தி வருகிறது. மார்ச் மாதம் முதலே வெளியின் தாக்கம் அதிகரித்து காண்ப்படுகிறது. ஏப்ரல் மாதமும் அதே நிலைதான் தொடர்கிறது. இந்த நிலை நீடித்தால் மே மாதம் என்னவாகுமோ என பலரும் அச்சத்தில் உள்ளனர்.
இதற்கிடையில் வெப்ப அலை மோசமாக இருப்பதால் பகலில் 11 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டுமென கூறி வருகிறார்கள். குறிப்பாக வயதானவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் இந்த சமயத்தில் வெளியில் செல்லக்கூடாது.
இதனால் மக்கள் வெளியில் வராமல் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார்கள். இருப்பினும் கொளுத்தும் வெயிலை பொருட்படுத்தாமல் போக்குவரத்து காவலர்கள் அவர்களின் கடமைகளை செய்து வருகிறார்கள். இதனால் அவர்களை வெயிலில் இருந்து பாதுகாக்கும் பொருட்டு குஜராத் மாநில அரசு அசத்தலான ஐடியா ஒன்றை செய்துள்ளது.
அதன்படி வெயிலில் பணி செய்யும் போக்குவரத்து காவலர்கள் தங்களை வெயிலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள ஏசி ஹெல்மெட் வழங்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் வதோதராவில் தான் இந்த திட்டத்தை அரசு செயல்படுத்தியுள்ளது. இந்த ஹெல்மெட் மூலம் அதிகப்படியான வெயிலில் இருந்து காவலர்கள் அவர்களை பாதுகாத்துக்கொள்ள முடியும்.
இந்நிலையில், ஏசி ஹெல்மெட் அணிந்து வதோதரா காவலர்கள் போக்குவரத்து பணியில் ஈடுபட்டு வரும் காட்சிகள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. இதனை கண்ட பலரும் தமிழக காவலர்களுக்கும் இந்த ஏசி ஹெல்மெட்டை வழங்கினால் நன்றாக இருக்கும் என்று கூறி வருகிறார்கள்.