Breaking News, National, News

விபத்துக்குள்ளானது ஆக்ரா விரைவு ரயில் – உதவி எண் அறிவிப்பு!!

Photo of author

By Hasini

விபத்துக்குள்ளானது ஆக்ரா விரைவு ரயில் – உதவி எண் அறிவிப்பு!!

குஜராத் மாநிலத்தில் இருந்து நேற்று மாலை உத்தரப்பிரதேசம் ஆக்ரா நோக்கி சபர்மதி-ஆக்ரா விரைவு ரயிலானது புறப்பட்டுள்ளது. இந்த ரயிலானது நள்ளிரவு 1 மணியளவில் ராஜஸ்தான் அஜ்மீர் ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருக்கையில் திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானது என்று தகவல்கள் தெரிவிக்கிறது. இன்ஜினுடன் கூடிய 4 பெட்டிகள் தடம் புரண்டதாக தெரிகிறது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.

இந்த விபத்திற்கான காரணம் அறியப்படவில்லை, விரைவில் கண்டறியப்படும் என்று வடமேற்கு ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது. இந்த விபத்து குறித்து தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், ரயில்வே ஊழியர்கள் அப்பகுதிக்கு விரைந்து தடம் புரண்ட ரயில் பெட்டிகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே, இந்த ரயிலில் பயணம் மேற்கொண்ட பயணிகள் குறித்த விவரங்களை தெரிந்து கொள்ள 0145-2429642 என்னும் உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

திடீரென ஏற்பட்ட இந்த ரயில் விபத்து காரணமாக 2 ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்ட நிலையில், அவ்வழி செல்லும் 6 ரயில்களின் சேவைகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது என்னும் தகவலும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மதம் பிடித்த யானை போல திமுக பணவெறி பிடித்து சுற்றுகின்றது! பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி!

ரஷ்யா-உக்ரைன் போர் : ரஷிய ராணுவத்திடம் சிக்கியதாக கூறி, உதவி கேட்டு மீண்டும் வீடியோ வெளியிட்டுள்ள இந்தியர்கள்!!