சேலம் ஏவிஆர் ரவுண்டானா அருகில் கோர விபத்து!! கல்லூரி மாணவியின் மீது ஏறிய கார்!

சேலம் ஏவிஆர் ரவுண்டானா அருகில் கோர விபத்து!! கல்லூரி மாணவியின் மீது ஏறிய கார்!

இன்று நடிகர் அஜித் நடிப்பில் துணிவு படமும்,நடிகர் விஜய் நடிப்பில் வாரிசு படமும் வெளியானது. அதனால் அனைத்து இடங்களிலும் ரசிகர்கள் கூட்டம் அலைமோதி வருகின்றனர். இந்நிலையில் காலை ஒன்பது மணியளவில் சேலம் மாவட்டம் ஏவிஆர் ரவுண்டானா அருகில் கல்லூரி மாணவி ஒருவர் அவருடைய இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு முன்பாக மற்றொரு நபர் அவருடைய மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அந்நிலையில்  அவர்களுக்கு எதிரே வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் மோதியது.

அந்த மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி அந்த கல்லூரி மாணவி மேல் இடித்துள்ளது அதில் அந்த மாணவி கீழே விழுந்துள்ளார். அப்போது அந்த மாணவியின் மீது கார் ஏறி சிறிது தூரம் இழுத்து சென்றது. அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து 108 ஆம்புலன்ஸ்யை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர்.தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து மாணவியை மீட்டு ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் காரை இயக்கி வந்தவர் மதுபோதையில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதனை தொடர்ந்து காரில் இருந்தவர்களின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அத பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து போக்குவரத்து நெரிசலை சரிசெய்தனர்.

Leave a Comment