ஜாதக சாஸ்திரப்படி, கெட்ட கனவுகளிலிருந்து விடுபட இதை செய்தால் போதும்.. நிம்மதியாக தூங்கலாம்!

Photo of author

By Gayathri

ஜாதக சாஸ்திரப்படி, கெட்ட கனவுகளிலிருந்து விடுபட இதை செய்தால் போதும்.. நிம்மதியாக தூங்கலாம்!

ஒருவருக்கு தூக்கம் என்பது இன்றியமையாதது. சிலருக்கு அந்த தூக்கம் நல்ல தூக்கமாக அமையும். ஒரு சிலருக்கு கெட்ட தூக்கமாக அமையும்.

அதுவும் பயங்கரமான கனவுகள் வந்தால், ஏதோ கெட்டது நடக்கப் போவதுபோல் மனதில் நினைத்து தூங்க முடியாமல் அவதிப்படுவார்கள். இரவில் சரியாக தூங்கவில்லையென்றால், உடல் நலனில் பல பிரச்சினைகள் ஏற்படும்.

கெட்ட கனவுகளிலிருந்து விடுபட ஜோதிடத்தில் சில பொருட்களை தலையணைக்கு அடியில் வைத்தால் படுத்தால் நிம்மதியாக தூங்கலாம் என்று சொல்கின்றனர். அப்படி எந்தெந்த பொருளை தலையணையில் வைத்து படுத்து தூங்கினால் நிம்மதியான தூக்கம் பெறலாம் என்பதை குறித்து பார்க்கலாம் –

இஞ்சி :

ஜோதிட சாஸ்திரப்படி, நிம்மதியான தூக்கம் பெற ஒரு துண்டு இஞ்சியை ஒரு சிறிய துணியில் கட்டி தலையணைக்கு அடியில் வைத்து படுத்தால் கெட்ட கனவுகளை தடுக்குமாம்.

கறிவேப்பிலை:

கெட்ட கனவுகளிலிருந்து விடுபட்டு, நிம்மதியான தூக்கம் பெற, நீங்கள் படுக்கைக்குச் செல்வதற்கு முன் ஒரு சிறிய துணியை எடுத்து அதில் 5-6 சிறிய கறிவேப்பிலைகளைக் கட்டி, அதை தலையணைக்கு அடியில் வைத்து தூங்கலாம். இதனால், கெட்ட கனவுகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலலாமாம்.

மஞ்சள் தூள் :

கெட்ட கனவுகளிலிருந்து விடுபட, தூங்கச் செல்வதற்கு முன், ஒரு சிறிய துணியில் ஒரு துண்டு மஞ்சளைக் கட்டி உங்கள் தலையணையின் கீழ் வைத்து படுத்து தூங்கினால் தூங்குவது மட்டுமல்லாமல், வேலை, தொழில், பொருளாதாரம் சிறக்கும்.

தண்ணீர்

நல்ல உறக்கம் வேண்டும் என்றால், தூங்கச் செல்லும் முன் கண்டிப்பாக தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் பல வழிகளில் நமக்கு ஆரோக்கியத்தை தரும். ஆனால் அளவாக குடிக்கவும். மேலும், தூங்கச் செல்லும் முன் கால்களை நன்றாக கழுவி உறங்கச் செல்லலாம்.