பழமையான பாரம்பரிய கட்டடங்களை மீட்டுருவாக்கும் பணிகள் குறித்து பொதுப்பணித்துறை விளக்கம்!! 

Photo of author

By Savitha

பழமையான பாரம்பரிய கட்டடங்களை மீட்டுருவாக்கும் பணிகள் குறித்து பொதுப்பணித்துறை விளக்கம்!!

பொதுப்பணி துறையின் சிறப்பு பிரிவான கட்டட மையம் மற்றும் பாதுகாத்தல் கோட்டம், தமிழ்நாட்டில் அமைந்துள்ள பாரம்பரிய கட்டிடங்களை மறு சீரமைக்கவும் மீட்டுருவாக்கவும் மற்றும் பாதுகாக்கவும் செயல்பட்டு வருவதாகவும், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலச மஹால், எழும்பூர் நீதிமன்ற கட்டடம், எழும்பூர் அருங்காட்சியகம், சென்னை உயர்நீதிமன்றம், சேப்பாக்கத்தில் உள்ள பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகம் போன்ற பல மதிப்புமிக்க பாரம்பரிய கட்டடங்களை பொதுப்பணித்துறை சார்பில் ஏற்கனவே மீட்டுருவாக்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கட்டடக்கலை மதிப்பிற்கு பெயர் பெற்ற ஹுமாயூன் மஹால் தற்போது சீரமைக்கப்பட்டு வருகிறது எனவும், சென்னை ராஜாஜி சாலையில் உள்ள பதிவுத்துறை துணைத் தலைவர் அலுவலகம், கோயம்புத்தூரில் உள்ள குதிரை வண்டி நீதிமன்ற கட்டடம், சேலத்தில் உள்ள பழைய தொழிலாளர் நீதிமன்ற கட்டடம், திருச்சியில் உள்ள பழைய ஆட்சியர் கட்டடம், கோயம்புத்தூரில் உள்ள ஆளுநர் மாளிகை, கொடைக்கானல் கோஹினூர் ஷேக் அப்துல்லா மாளிகை மற்றும் சென்னை பல்கலைக்கழக கட்டிடம் போன்ற பழமையான பாரம்பரிய கட்டிடங்களை மீட்டுருவாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது