தேசிய கல்விக் கொள்கையை ஏற்கும்மாறு மத்திய அரசு மாநில அரசுக்கு நெருக்கடி கொடுத்து வரும் நிலையில், சூசகமாக அடுத்த ஆண்டு முதல் ஒவ்வொரு வகுப்பிற்கும் தேசிய கல்விக் கொள்கையை படிப்படியாக நுழைக்கக்கூடிய திட்டத்தினை துவங்கி இருக்கிறது மத்திய அரசு.
மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பெரிய மாற்றம் தற்பொழுது வெளியாகி இருக்கிறது. அந்த மாற்றத்தின் படி வருகிற 2026 ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் 9 ஆம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவர்களுக்கு அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் 2 அடுக்கு நிலைகள் உருவாக்கப்பட்டிருக்கிறது.
இந்த இரண்டு அடுக்கு சிறப்பு நிலைகளின் படி முதல் நிலை தர நிலை என்றும் இரண்டாவது நிலை அட்வான்ஸ் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 2026-ல் 9 ஆம் வகுப்பில் துவங்கக்கூடிய இந்த திட்டமானது 2028 ஆம் ஆண்டில் 10 ஆம் வகுப்பிற்கும் துவங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி இந்தியன் எக்ஸ்பிரஸ் முதன் முதலில் அறிவித்ததன் படி, தேசிய பள்ளி வாரியத்தின் பாடத்திட்ட குழு இந்த இரண்டு பாடங்களையும் அதாவது அறிவியல் மற்றும் சமூக அறிவியல் இந்த இரண்டு பாடங்களையும் இரண்டு நிலைகளில் வழங்க முடிவு செய்திருப்பதாக தெரிவித்திருக்கிறது.
முடிவெடுக்கும் அதிகார அமைப்பானது வருகிற 2026 ஆம் ஆண்டு இந்தத் திட்டத்தினை செயல்படுத்த முன்மொழிவுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த திட்டத்தின் படி அறிவியல் மற்றும் சமூக அறிவியலில் உள்ள இரண்டு நிலைகளில் மாணவர்கள் தங்களுக்கு தேவையான நிலைகளை தேர்ந்தெடுத்து படிக்கலாம் என்றும் அட்வான்ஸ் நிலைகளை தேர்ந்தெடுத்து படிப்பதன் மூலம் உயர் படிப்புகளுக்கு எளிமையான ஒரு கல்வி சூழலை உருவாக்க அது பயன்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து கணிதத்தில் தொடங்கி மற்ற பாடங்களுக்கும் அதற்குரிய மதிப்பீடுகள் இரண்டு நிலைகளில் வழங்கப்பட இருப்பதாகவும் மாணவர்கள் தங்கள் பாடங்களில் தங்களுக்கு தேவையான நிலைகளை பிரித்து அவற்றின் தரநிலை மற்றும் உயர்நிலை மட்டத்தில் தேர்வு செய்து படிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் தேசிய கல்விக் கொள்கையானது திணிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுவதோடு சிபிஎஸ்சி இரண்டு பாடங்களுக்கான புதிய பாடப் புத்தகங்களை மேம்பட்ட நிலைக்கு உள்ளடக்கிய கூடுதல் பகுதியுடன் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உருவாக்கும் பணியினை துவங்கி விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.