துள்ளி குதிக்கும் டெல்லி அணி..ஹாரி ப்ரூக் செய்த சாதனை!! இவர்தான் நம்பர் 1!!

0
79
Achievement by Harry Brook
Achievement by Harry Brook

cricket: ஐசிசி ஆண்களுக்கான டெஸ்ட் பேட்டிங் தரவரிசை பட்டியல் வெளியான நிலையில் இங்கிலாந்து அணியின் இளம் வீரர் ஹாரி ப்ரூக் முதலிடத்திற்கு முன்னேறினார்.

ஐசிசி நேற்று டெஸ்ட் போட்டிக்கான ஆண்கள் பேட்டிங் தரவரிசை பட்டியலை வெளியிட்டது. இந்த போட்டியில் இந்திய அணியின் வீரர்கள் டாப் 5 ல் 4 வதாக ஜெயஷ்வால் உள்ளார். மேலும் இங்கிலாந்து அணியின் ஜாம்பவான் ஜோ ரூட் முதலிடத்தில் இருதார்.இந்திய அணி வீரர்களை பின்னுக்கு தள்ளியுள்ளார்.

ஆனால் இதே இங்கிலாந்து அணியின் இளம் வீரரான ஹாரி ப்ரூக் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாடி 898 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். இரண்டாவது இடத்தில் ஜோ ரூட் 897 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். மூன்றாவது இடத்தில் கேன் வில்லியம்சன் உள்ளார்.

மேலும் இந்திய அணியின் ஜாமபவான் பின்னடைவு, இந்திய அணியின் இளம் வீரர் யஷ்ச்வி ஜெய்ஷ்வால் நான்காவது இடத்தில் 811 புள்ளிகளுடன் உள்ளார். ரிஷப் பண்ட் 724 புள்ளிகளுடன் 9 வது இடத்திலும், சுப்மன் கில் 672 புள்ளிகளுடன் 17 வது இடத்திலும்,விராட் கோலி 661 புள்ளிகளுடன் 20 வது இடத்திலும் உள்ளார். இந்த முறை நடைல்பெற்ற ஐ பி எல் மெகா ஏலத்தில் முதல் இடத்தில் உள்ள ஹாரி ப்ரூக்கை டெல்லி அணி ஏலத்தில் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 2 போட்டிகளை வெற்றி பெற்று தொடரை வென்றுள்ளது. இன்னும் ஒரு போட்டி மட்டும் நடைபெறவுள்ளது.

Previous articleதிருவண்ணமலை மகாதீபம் ஏற்றப்படும்போது மலை மீது ஏற அனுமதி கிடையாது!!
Next articleலோன் செயலியால் மனைவிக்கு நடந்த கொடூரம்!! அவமானத்தால் கணவன் எடுத்த விபரீத முடிவு!!