பாஜக வேட்பாளர் முகத்தின் மீது ஆசிட் போன்ற திரவம் வீச்சு! வெறுப்பின் உட்சகட்டம்!

0
92
Acid-like chemical blow on BJP candidate's face! The height of hatred!
Acid-like chemical blow on BJP candidate's face! The height of hatred!

பாஜக வேட்பாளர் முகத்தின் மீது ஆசிட் போன்ற திரவம் வீச்சு! வெறுப்பின் உட்சகட்டம்!

இந்த சட்டமன்ற தேர்தலானது ஐந்து மாநிலங்களில் நடக்கயிருக்கிறது.அதில் மேற்கு வங்கத்தில் முதற்கட்ட வாக்குபதிவு நடைபெற்றது. இங்கு மொத்தம் 294 தொகுதிகள் உள்ளன.இதில் 8 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.அதிலும் நேற்று 5 மாவட்டங்கலிலுள்ள 30 தொகுதிகளில் வாக்கு பதிவு தொடங்கியது. மேலும் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற 30 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் 27 தொகுதிகளில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிட தக்கது.திரிணாமுல் காங்கிரஸ் கட்சின் வேட்பாளர் மற்றும் தற்போதைய முதலமைச்சராக மம்தா பானர்ஜி உள்ளார்.இந்நிலையில் சில தினங்களுக்கு முன் அவர் மர்ம நபர்களால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.அதனைத்தொடர்ந்து மேற்கு வங்கத்தின் தேர்தலானது 8 கட்டமாக நடைபெறும்.அதன் முதற்கட்ட தேர்தலானது நேற்று தொடங்கியது.

இந்நிலையில் பகவான்பூர் தொகுதியில் வாக்கு பதிவு தொடங்கும் முன் அங்கிருக்கும் மக்களை மிரட்டியதாக தகவல் வெளியானது.அதனைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த 2 பனி காவலர்கள் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதில் அப்போது அந்த பணியிலிருந்த வீரர்கள் காயமடைதுள்ளனர்.திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்காக இவ்வாறு நடந்துக்கொள்வதாக பாஜக தரப்பினர் கூறிவருகின்றனர்.துப்பாக்கி சூட்டினால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அதனைத்தொடர்ந்து மேற்குவங்களத்தில் ஹூக்ளியில் நேற்று நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தீங்கு விளைவிக்கும் இரசாயணங்கள் கொண்ட வண்ணப்பொடி தனது முகத்தில் வீசப்பட்டதாக பாஜக,எம்.பி லாக்கெட் சாட்டர்ஜி தெரிவித்துள்ளார்.இது வெறுப்புணர்வின் உச்சம் எனக் கூறினார்.என் மீது அந்த இரசாயண கலந்த பொருளை வீசும் போது நான் அவரை பார்த்தேன்.அவர் திரிணாமுல் காக்கிரஸ் பேட்ஜ் அணிந்த மூன்று,நான்கு நபர்களை கண்டேன் என்றார்.அவர்கள் தான் அதை செய்திருக்க வேண்டுமென  செய்தியாளர்களிடம் கண்ணீர் விட்டபடி கூறினார்