சமந்தாவை தொடர்ந்து அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட மற்றொரு நடிகை!

0
244

சமந்தா மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் மற்றொரு பிரபல நடிகையான பூனம் கவூர் என்பவரும் அரியவைகை நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்.

நமது உணவுப்பழக்க வழக்கம் மற்றும் மோசமான வாழ்க்கை முறை காரணமாக பலவித புதிய புதிய நோய்களும் வந்துகொண்டே இருக்கின்றது, அரியவகை நோயென்பதால் அதற்கான சிகிச்சைகளும் அரிதாக தான் இருந்து வருகிறது. தென்னிந்திய திரையுலகின் மிகவும் பிரபலமான முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா சில வாரங்களுக்கு முன்னர் மயோசிட்டிஸ் என்னும் அரியவகை தசை அழற்சி நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நோயினால் அவர் பட்ட அவஸ்தை குறித்து சமந்தா கண் கலங்கிக்கொண்டு கனத்த குரலில் கூறியது அனைவரையும் கலக்கமடைய செய்தது, சமீபத்தில் அவரது உடல்நிலை மோசமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக செய்திகள் வந்தது. அதன்பின்னர் அந்த செய்தி வதந்தி என்றும் அவர் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்பட்டது.

மேலும் சமந்தாவை மேல் சிகிச்சைக்காக தென் கொரியா செல்ல மருத்துவர்கள் பரிந்துரைத்து இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. இந்நிலையில் மற்றோரு பிரபல நடிகை பூனம் கவூர் ஒரு அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது தெரியவந்துள்ளது. நெஞ்சிருக்கும் வரை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இந்த நடிகைக்கு இன்றுவரை ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகிறது. மேலும் தமிழில் இவர் உன்னைப்போல் ஒருவன், பயணம், வெடி, 6, என் வழி தனி வழி போன்ற சில படங்களில் நடித்துள்ளார். தமிழ் மொழிபடங்கள் மட்டுமல்லாது இவர் மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிபடங்களிலும் நடித்துள்ளார்.

 

 

சமந்தாவை தொடர்ந்து அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட மற்றொரு நடிகை!

தற்போது பூனம் கவூர் ஃபைப்ரோமியால்ஜியா (Fibromyalgia ) எனும் அரியவகை நோயினால் பாதிக்கப்பட்டு இருக்கிறார், கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக இவர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நோயின் காரணமாக உடல் சோர்வு, தூக்கம், ஞாபக மறதி, மனநிலை மாற்றம், தசை வலி போன்றவை ஏற்படுமாம், இந்த நோய்க்காக அவரை கேரளாவில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

Previous articleM.Sc படித்தவர்களுக்கு மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் பணிபுரிய ஓர் அறிய வாய்ப்பு !
Next articleவிடுதலை படப்பிடிப்பு தளத்தில் சண்டை பயிற்சியாளர் உயிரிழப்பு…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here