ரயில்வே வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! ரயில்களில் இனி இந்த வகுப்புகள் இல்லை! 

0
95
Action announcement issued by the railway! Trains no longer have these classes!

ரயில்வே வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! ரயில்களில் இனி இந்த வகுப்புகள் இல்லை!

ரயில்வே தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் ரயில்களில் அதிக லாபம் ஈட்டும் பயண வகுப்புகள் என்றால் ஏசி 3 அடுக்கு வகுப்புகள் தான்.மேலும் இந்த பயண வகுப்பு மிக பிரபலமானது.இதனை தொடர்ந்து பயணிகளுக்கு மலிவு விலையில் பயணம் செய்ய வசதியாக இருக்கும் வகையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஏசி பொருளாதார பெட்டிகள் 3 இ  வசதி அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த 3 இ வசதியில் ரயில் கட்டணம் 6 முதல் 8 சதவீதம் வரை குறைவாகவே வசூல் செய்யப்பட்டது.ஏசி 3 அடுக்கு பெட்டியில் 72 பேர் பயணம் செய்யலாம்.ஆனால் ஏசி 3 இ பெட்டியில் 83பேர் பயணம் செய்யலாம்.மேலும் இந்த பெட்டிக்கு முன்பதிவு செய்யும் பொழுது ஏசி 3 பொருளாதார வகுப்பு என்ற பிரிவை குறிப்பிட வேண்டும்.

இந்நிலையில் ரயில்களில் 3 இ என்ற வசதி ரத்து செய்யப்பட்டு இனி ஏசி 3 இ வசதிகள் இல்லை என ரயில்வே முடிவு எடுத்துள்ளது என கூறப்படுகின்றது.இது குறித்து ரயில்வே அதிகாரி  கூறியதாவது அடுத்த சில மாதங்களுக்கு ரயில்களில் ஏசி 3 இ வகுப்புகள் கிடையாது.ஏசி 3 இ வகுப்புகள் ஏசி 3 அடுக்கு வகுப்புகளுடன் இணைக்கப்படும்.இந்த பனி அடுத்த நான்கு மாதங்களுக்குள் முடிக்கப்படும்.தற்போது 436 ரயில்களில் ஏசி 3 இ பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.11277 ரயில்களில் ஏசி 3 ஆம் வகுப்பு பெட்டிகள் உள்ளது என கூறினார்.

author avatar
Parthipan K