நீதிமன்றத்தின் அதிரடி அட்டாக்.. மருத்துவமனை கபட நாடகத்தை ஆரம்பித்த செந்தில்!! உச்சக்கட்ட பரபரப்பில் வழக்கு!!

0
600
Action attack of the court.. Senthil who started the hospital fake play!! Case in extreme excitement!!
Action attack of the court.. Senthil who started the hospital fake play!! Case in extreme excitement!!

நீதிமன்றத்தின் அதிரடி அட்டாக்.. மருத்துவமனை கபட நாடகத்தை ஆரம்பித்த செந்தில்!! உச்சக்கட்ட பரபரப்பில் வழக்கு!!

தமிழக மின்சாரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி கடந்த வருடம் ஜூன் மாதம் அமலாக்க துறையால் பண மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். மேற்கொண்டு அவரை அழைத்துச் செல்லும் பொழுது திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டு பின்பு அவருக்கு இருதய அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேற்கொண்டு இந்த வழக்கில் இருந்து அவருக்கு ஜாமின் அளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

ஆனால் வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். அது மட்டுமின்றி இன்று செந்தில் பாலாஜி நேரில் ஆஜராகி குற்றச்சாட்டு பதிவு செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. நேரில் ஆஜராக இருந்த நிலையில் அவருக்கு திடீரென்று மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை அளித்து வருவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் செந்தில் பாலாஜி ஜாமீன் குறித்த உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய உள்ளதாகவும் இதனால் குற்றச்சாட்டு பதிவை தள்ளி வைக்க வேண்டுமென்றும் நீதிமன்றத்தில் மனு கொடுத்துள்ளனர். இன்று இந்த வழக்கானது விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமலாக்கத்துறை கையில் சிக்கிக்கொண்ட செந்தில் பாலாஜியினால் அதன் விசாரணை வளையத்திலிருந்து வெளியேற முடியவில்லை என பலரும் கூறி வருகின்றனர். அதேபோல ஒவ்வொரு முறை குற்றப்பதிவு உள்ளிட்ட பல விசாரணைகளுக்கும் செந்தில் பாலாஜி முழு ஒத்துழைப்பும் தருவதில்லை எனவும் இதனை மழுப்பும் வேலையாகவே உடல்நிலை கோளாறு என்ற நாடகத்தை நடத்துவதாக அரசியல் வட்டாரங்கள் பேசி வருகின்றனர்.

Previous articleமோடி+ஆளுநர்.. இதை மட்டும் இனி கவனியுங்கள்!! பிரஷராகும் பொம்மை முதல்வர்!!  
Next articleதெற்கு இரயில்வேயில் 2438 காலிப்பணியிடங்கள்! ஆகஸ்ட் 12 தான் கடைசி நாள்!