எலான் மஸ்க் எடுத்த அதிரடி முடிவு! ஊழியர்களுக்கு வந்த மெயில்! 

0
140
Action decision taken by Elon Musk! Email to employees!
Action decision taken by Elon Musk! Email to employees!

எலான் மஸ்க் எடுத்த அதிரடி முடிவு! ஊழியர்களுக்கு வந்த மெயில்!

உலகின் நம்பர் ஒன் பணக்காரர்ரான எலான் மஸ்க் அமெரிக்காவை தலைமை இடமாக கொண்டு செயல்படும் டுவிட்டர் நிறுவனத்தை அண்மையில் வாங்கினார்.அதனையடுத்து அவர் டுவிட்டர் சேவை மற்றும் நிர்வாகத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளார்.மேலும் அவர் ஆள்குறைப்பு நடவடிக்கையும் எடுத்து வருகின்றார்.மேலும் ப்ளூடிக் கட்டணம் அதிகரிக்கப்பட்டது.

மேலும் அந்த நடைமுறை இந்தியாவில் இந்த மாதம் அமல் படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. உலகம் முழுவதும் டுவிட்டர் நிறுவனத்தில் பணியாற்றும் 7,500 ஊழியர்களில் 50சதவீதம் பேரை நீக்க செய்தார்.செலவு குறைப்பு நடவடிக்கை என்ற பெயரில் அவருடைய இந்த முடிவால் இந்தியாவில் பணியாற்றிய ஊழியர்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.இந்தியாவில் டுவிட்டர் நிறுவனத்தில் சுமார் 250க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வரும் நிலையில் 160பேர் வரை பணிநீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

அதனையடுத்து அவர்களுக்கு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 4ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.அதன் பிறகு அவர்கள் பணியிலிருந்து நீக்கப்படுவார்கள்.அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள அவகாசத்திற்குள் அவர்கள் வேறு வேலை தேடி கொள்ள வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.இந்த இடைப்பட்ட காலத்தில் நிறுவனத்தின் லேப்டாப் போன்ற பொருட்களை ஒப்படைக்க வேண்டும் எனவும் மெயில் வந்துள்ளதாக ஊழியர்கள் கூறுகின்றனர்.

மேலும் அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு எந்த தகவலும் வரவில்லை என புலம்பி வருகின்றனர்.மேலும் டுவிட்டர் நிஐவனத்தில் எந்த இடத்தில் இருந்து  வேண்டுமானாலும் பணிப்புரியாலாம் ,நல்ல சம்பளம் போன்ற சலுகைகள் வழங்கப்பட்தாக கூறப்படுகின்றது.

Previous articleசுகாதார துறை வெளியிட்ட அறிவிப்பு! எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்!
Next articleஅந்த விவகாரத்தை நாங்கள் கையில் எடுக்காவிட்டால் உண்மை வெளிவந்திருக்காது! அண்ணாமலை அதிரடி!