வேரோரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதால் காதலி எடுத்த அதிரடி முடிவு !!

Photo of author

By Parthipan K

புதுச்சேரி அருகே தன் காதலனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்து வைத்தால் மனமுடைந்த காதலி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி சேதாப்பட்டை பகுதியை சேர்ந்த சரவணன் என்பவர், கல்லூரி மாணவி காயத்ரி என்பவரை காதலித்து வந்துள்ளார் .இவ்விருவரும் காதலித்து வந்த நிலையில் ,சரவணன் பெற்றோர்களுக்கு காதல் விவகாரத்தை பற்றி தெரியவந்தது .இதனால் சரவணன் வீட்டில் கடுமையாக எதிர்ப்பு கிளம்பியது. மேலும், இதற்காக அவசர அவசரமாக சரவணனுக்கு வேறு ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

அந்த திருமணதை தடுக்கும் வகையில் காயத்ரி பல வழியில் முயன்றபோதும், முயற்சிகள் எதுவும் பலனளிக்காமல் போனது. இதனால் மனமுடைந்த காயத்ரி, தூக்கு மாட்டி தற்கொலை தற்கொலை செய்து கொண்டார். இது சம்பந்தமாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.