தனியார் மருத்துவமனைகளுக்கு மாநில அரசு போட்ட அதிரடி உத்தரவு!

0
113

இந்தியாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத வாக்கிலேயே நோய் தொற்று நோய் பரவல் ஆங்காங்கே ஆரம்பிக்க தொடங்கியது. அவ்வாறு ஆரம்பித்த அந்த நோய் தொற்று கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நாடு முழுவதும் மிக வேகமாகப் பரவத் தொடங்கியது.அதனை அடுத்து சென்ற வருடம் மார்ச் மாதம் 25ஆம் தேதி நாடு தழுவிய ஊரடங்கு மத்திய அரசு அறிவித்தது. அதன் பிறகு இந்த நோய் தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

மத்திய, மாநில அரசுகள் இணைந்து பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதேபோல தமிழ்நாட்டை பொறுத்தவரையில் நோய்த்தொற்று பரவல் இருந்தாலும்கூட அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நோய் தடுப்பு பணிகள் தொடர்பாக ஆய்வு செய்தார்


இதனால் தமிழகத்தில் வெகுவாக இந்த நோய்த்தொற்றின் பரவல் குறைய தொடங்கியது. கடந்த பிப்ரவரி மாதம் வரையில் வெகுவாக குறைந்து வந்த இந்த நோய்த்தொற்று தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. இந்த நோய் தொடரின் இரண்டாம் ஆலையில் சிக்கி பல்வேறு மக்கள் பாதிப்படைந்து இருக்கிறார்கள். அதனை முறியடிப்பதற்கு மத்திய ,மாநில அரசுகளும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

இதற்கிடையில் நாட்டில் தடுப்பூசி பற்றாக்குறை மற்றும் உயிர்காக்கும் ஆக்சிசன் பற்றாக்குறை போன்ற தட்டுப்பாடுகளும் ஏற்பட்டது. அதனை சரிசெய்யும் விதமாக அமெரிக்கா நேற்றைய தினம் மருத்துவ உபகரணங்களை இந்தியாவிற்காக அனுப்பி வைத்திருக்கிறது.

ஆனால் நாட்டில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் தட்டுப்பாடு இருக்கிறது என்று சொல்லிக்கொண்டாலும் மத்திய அரசு அதனை அறவே மறுத்து வருகிறது. போதிய ஆக்சிஜன் சிலிண்டர்கள் இருக்கிறது அதனை அந்தந்த பகுதிகளுக்கு கொண்டு சேர்ப்பதுதான் சிரமம் ஏற்படுகிறது என்று தெரிவித்திருக்கின்றார் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன்.

இந்த நிலையில், சென்ற முறை போலவே இந்த முறையும் தமிழ்நாட்டில் சென்னை தான் இந்த நோய் தொற்றினால் அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதியாக இருந்து வருகிறது. நோயாளிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு இருப்பதால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கை அனைத்தும் நிரம்பி இருக்கின்றன.

இந்த தட்டுப்பாட்டை நீக்குவதற்கு தனியார் மையங்கள், வர்த்தக மையங்கள், கல்லூரிகள் போன்றவை நோய் தொற்று சிகிச்சை மையங்கள் ஆக மாற்றப்பட்டு வருகின்றன. ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையிலும் படுக்கைகள் நிரம்பியிருப்பதால் நோயாளிகள் அவசர ஊரிலேயே காத்திருக்க வேண்டிய ஒரு சூழ்நிலையில் அந்த மருத்துவமனை இருந்து வருகிறது.

இப்படியான சூழ்நிலையில், தமிழகம் முழுவதும் இருக்கின்ற தனியார் மருத்துவமனைகளில் 50 சதவீத படுக்கைகளை நோய் சிகிச்சைக்கு ஒதுக்குமாறு தமிழக அரசு சுகாதாரத் துறைக்கு உத்தரவு போட்டிருக்கிறது.

தமிழகத்தில் இருக்கின்ற நோய் தொற்றினால் பாதித்தவர்களுக்கு சிகிச்சை கொடுக்க அனுமதி வழங்கப்பட்டு இருக்கின்ற 578 தனியார் மருத்துவமனைகளும் மொத்த படுக்கைகளில் 50 சதவீதத்தை நோய்த்தொற்று காரணமாக சிகிச்சை அளிக்க வருவோருக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Previous articleகைது செய்யப்படுகிறாரா சிதம்பரம்? தேசிய அளவில் ட்ரெண்டான #ArrestPChidambaram!
Next articleதிமுகவிற்கு அதிர்ச்சி கொடுத்த முக்கிய கூட்டணி கட்சி!