அரசு ஊழியர்களுக்கு அதிரடி ஹாப்பி நியூஸ்!! ஜூலை மாதம் முதல் உயரும் சம்பளம்!!
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி பண உயர்வு இருக்கும் என்றும் இது குறித்து அறிவிப்புகள் வரும் ஜூலை மாதம் வெளியிடப்படும் என்றும் தகவல் கணிக்கப்பட்டு வருகிறது.
அகவிலைப்படி பண உயர்வு என்பது எஜசிபிஜ என்ற குறியீடு மூலம் கணக்கிடப்படுகிறது.இந்த புள்ளிகளின் உயர்வை வைத்து அகவிலைப்படி பண உயர்வை மதிப்பீடு செய்ய முடியும்.
இது சற்று மாதங்களாக குறைந்து வரும் நிலையில் தற்போது அதிகரித்து வர தொடங்கியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் இது 132.8 அளவில் இருந்த நிலையில் பின்னர் ஏறுவதும் இறங்குவதும் என்று புள்ளிகள் மாறிக்கொண்டே இருந்தது.
சென்ற ஏப்ரல் மாதம் இது மீண்டும் ஏற தொடங்கியுள்ளது.அந்த எஜசிபிஜ புள்ளிகள் 0.9 மதிப்பில் இருந்து தற்பொழுது 134.2 சதவீதமாக உயரத் தொடங்கியுள்ளது.
அதன்படி அகவிலைப்படி 42 சதவீதம் வாங்கியவர்கள் இனி 46 சதவீதம் வாங்குவார்கள் என்று கூறப்படுகிறது.இதன் அறிவிப்புகள் ஜூலை மாதம் வெளியிடப்படும் என்று கணிக்கப்படுகிறது.
சமீபத்தில் தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 38 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பணவீக்கம் உயர்ந்து கொண்டே இருக்கும் அதனால் பொருட்களின் விலை உயரும் இதை தான் அகவிலைப்படி உயர்வு என்பார்கள்.இது ஆண்டிற்கு ஜனவரி முதல் ஜூன் வரையும் மற்றும் ஜூலை முதல் டிசம்பர் வரையும் என்று இரண்டு கட்டமாக உயர்த்தப்படும்.
இதனைபோன்று ஒவ்வொரு மாநிலத்திலும் ஆண்டிற்கு ஏற்ப அகவிலைப்படி உயர்வு ஏறுவதும் இறங்குவதும் என்று மாறிக்கொண்டே உள்ளது. அதனால் அரசு ஊழியர்களுக்கு வரும் ஜூலை மாதம் சம்பள உயர்வு இருக்கும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கிறது.