அமலாக்கத்துறையின் அதிரடி வேட்டை! இந்த நிறுவனத்தின் சொத்துக்கள் முடக்கம்!
தற்போது செல்போன் செயலியின் மூலம் பணம் மோசடி, வங்கி கணக்கு எண் போன்றவைகளின் மூலம் எண்ணற்ற மோசடிகள் நடந்த வண்ணம் உள்ளானது அந்த வகையில் டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட பகுதியில் செயல்பட்டு வந்த ரியல் எஸ்டேட் நிறுவனமான ஐஆர்இஓ பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு எதிராக குர்கிராம், பஞ்ச்குலா, லூதியானா, டெல்லி போன்ற காவல் நிலையங்களில் பணமோசடி செய்யப்படுகின்றது என புகார்கள் வந்தது.
அந்த புகாரின் அடிப்படையில் டெல்லி அமலாக்கத்துறை சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது பணமோசடி தடுப்புச் சட்டத்தின் பிஎம்எல்ஏ கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மேலும் அந்த நிறுவனம் அந்த நிறவனத்தின் நிர்வாக இயக்குனர், துணைத் தலைவர் லலித் கோயல் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களில் சோதனை நடத்தப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் லலித் கோயல் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் ரியல் எஸ்டேட் நிறுவனம், நிர்வாக இயக்குநர் மற்றும் துணைத் தலைவர், தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் முக்கிய நிர்வாக நபர்களுக்குச் சொந்தமான ரூ.1,317.30 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளதாக தகவல் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் டெல்லி ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் ரூ.1,317.30 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.