அதிரடி இஷான் கிஷன்! இரட்டை சதம் அடித்து உலக சாதனை!!!
வங்காள தேசத்தில் நடக்கும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் இஷான் கிஷான் இரட்டை சதம் அடித்து உலக சாதனை இந்திய அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக வங்காளதேசம் சென்றுள்ளது. முதல் இரண்டு போட்டிகள் மிர்பூரில் நடந்தன. முதலாவது போட்டியில் ஒரு விக்கெட் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் 5 ரன்கள் வித்தியாசத்திலும் வங்காளதேசம் திரில் வெற்றியை பெற்று இந்தியாவுக்கு எதிராக 2-வது முறையாக ஒருநாள் தொடரை வென்றது.
இந்நிலையில் மூன்றாவது ஒருநாள் போட்டி சட்டோகிராமில் நடந்து வருகிறது. 3-வது போட்டியில் வென்று ஆறுதல் வெற்றியாவது பெற்றாக வேண்டிய சூழ்நிலையில் உள்ள இந்திய அணியில் காயம் காரணமாக கேப்டன் ரோஹித் சர்மா, வேகப்பந்து வீச்சாளர்கள் தீபக் ஷஹார், குல்தீப் சென், விலகிய நிலையில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ்,இஷான் கிஷான் இணைந்துள்ளார்.
முதலில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 8 பந்தில் 3 ரன்களுக்கு வெளியேறி ஏமாற்றமளித்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான இஷான் அதிரடியாக விளையாடி வங்காள வீரர்களின் பந்தினை தெறிக்க விட்டார். அதிரடி ஆறாம் காட்டி நல்லதொரு தொடக்கத்தினை அளித்தார்.இவருடன் கோலியும் இறங்கி அதிரடி காட்டி வருகின்றனர். வாங்க வீரர்களின் பந்தினை தெறிக்க விட்ட இஷான் ஒருநாள் போட்டியில் முதல் சதம் அடித்தார். கோலி அரை சதம் அடித்தார். சதம் அடித்ததும் இஷான் சிக்ஸர் மழையாக பொழிந்தார்.
மாஸ் காட்டிய இஷான் ஒருநாள் போட்டியில் இரட்டை சதத்தினை பதிவு செய்தார்.இதன் மூலம் குறைந்த பந்துகளில் உலகிலேயே அதிவேக இரட்டை சதம் அடித்த வீரர் என்ற உலக சாதனையை இஷான் படைத்தார். இவர் 126 பந்துகளில் 9 சிக்சர்கள் 23 பவுண்டரிகளை விளாசி 200 ரன்கள் குவித்து சாதனை உலக சாதனை புரிந்தார். மேலும் ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த 4-வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்க்கு முன்னர் ரோஹித் சர்மா 3 முறையும் சச்சின், சேவாக் தலா ஒரு முறையும் ஒருநாள் போட்டிகளில் சதம் விளாசியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போதைய நிலவரப்படி இந்திய அணி 46 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 376 என்ற மெகா ரன் ஸ்கோரை கடந்து விளையாடி வருகிறது.