புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கை கொடுக்கும் பாஜக! அண்ணாமலையின் அதிரடியான செய்கை!

0
178
BJP Ready to help! Annamalai!!
BJP Ready to help! Annamalai!!

புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கை கொடுக்கும் பாஜக! அண்ணாமலையின் அதிரடியான செய்கை!

புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ தயார் நிலையில் இருப்பதாக அண்ணாமலை கூறியுள்ளார்.

கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மாண்டஸ் புயலாக இரு தினங்களுக்கு முன்பு உருமாறியது. பல்வேறு கட்ட நகர்வுகளுக்கு பின்பு மாண்டஸ் புயல் மாமல்லபுரம் அருகே கரையை கடக்க தொடங்கியது. இந்நிலையில் புயலின் வெளிவட்டப்பாதை நேற்று இரவு 9;30 மணி அளவில் கரையை கடக்கத் தொடங்கிய நிலையில் அதிகாலை 3மணி அளவில் முழுவதுமாக கரையை கடந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் உறுதிப்படுத்தியது.

இன்று மதியம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக புயல் வலுவிழக்க கூடிய நிலையில் 8 மாவட்டங்களுக்கு மிக அதிக கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.இதனால் உள் மாவட்டங்களில் மழை தொடர வாய்ப்பு இருக்கிறது.

புயல் கரையை கடந்த பிறகு வேலூர் ராணிப்பேட்டையில் மிக பலத்த மழை பெய்தது.அங்குள்ள சிறுவளையம்கிராமத்தில் சாலை அடித்துச் செல்லப்பட்டதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள். வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் ஸ்டாலின் பார்வையிடும் நிலையில் பாரதிய ஜனதாவும் மக்களளுக்கு உதவுவதாக தெரிவித்துள்ளது.

இதுப் பற்றி பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநில தலைவர் அண்ணாமலை புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய பா.ஜ.க தொண்டர்கள் தயார் நிலையில் உள்ளனர். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் புயலால் சேதமடைந்த பகுதி மக்களுக்கு சேவை செய்ய பா.ஜ.க தொண்டர்கள் தயார் செய்யப்பட்டுள்ளனர். உதவி  தேவைப்படும் மக்கள் 91500-21831, 91500-21832, 9150021833  எண்களில் அழைக்கலாம் என்று அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.