கிடப்பில் கிடந்த டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு குறித்து நடவடிக்கை !!

0
107

டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு குறித்து சிபிசிஐடி காவல்துறையினர் நடவடிக்கையால், மேலும் 6 பேர் கைது செய்துள்ளனர். முக்கியமாக கருதப்படும் டிஎன்பிஎஸ்சி தேர்வு வழக்கானது கிடப்பில் உள்ளதாக புகார் எழுந்த நிலையில், தற்பொழுது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக கீழக்கரை மற்றும் ராமேஸ்வரம் மையங்களில் தேர்வு எழுதிய நூற்றுக்கும் மேற்பட்ட நபர்களில் 40-க்கும் அதிகமானோர் முன்னிலை பெற்றனர்.

இதனால் சந்தேகமடைந்த நிலையில், முறைகேடு நடந்திருப்பதாக ஜெயக்குமார் மற்றும் டி.என்.பி.எஸ்.சி அலுவலக உதவியாளர் ஓம் காந்தன் உள்ளிட்ட 47 அதிகாரிகளை கைது செய்தனர்.

மேலும் 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வில் மட்டுமல்லாமல் 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப்-2 ஏ தேர்வுகளிலும் , 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற வி.ஏ.ஓ தேர்வுகளிலும் முறைகேடு நடந்திருப்பதாக சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.

Previous articleஇந்தியாவில் 86.16% பேர் குணம்! அக். 11 கொரோனா பாதிப்பு நிலவரம்!
Next articleகொரோனா காலத்தில் பள்ளிக்கு சென்றதால் மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்!