பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!! அமைச்சரின் அதிரடி நடவடிக்கை!!
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்த நிலையில் இன்று 6 முதல் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறந்துள்ளது. 1 முதல் 5 ம் வகுப்பு மாணவர்களுக்கு 14 ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட இருக்கிறது.
இதன் வகையில் பள்ளிகள் இன்று திறக்கப்பட்ட நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னையில் உள்ள விருகம்பாக்கத்தில் உள்ள அரசு பெண்கள் பள்ளியில் மாணவிகளை வரவேற்றார். மேலும் மாணவிகளுக்கு பாடப் புத்தகங்களையும் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் கூறியதாவது நடப்பு ஆண்டில் மட்டும் 1.31 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர் என்று தெரிவித்தார்.
இந்த ஆண்டில் அரசு பள்ளிகள் 100% தேர்ச்சி விகிதத்தை கொடுக்க வேண்டும் என்றும் அதற்காக இலக்கை வைத்து ஆசிரியர்கள் பாடம் எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இதன் வகையில் பள்ளிகள் திறப்பு தாமதமானதால் இனி சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.
ஒவ்வொரு வகுப்பறையிலும் மாணவர்களுக்கு தண்ணீர் வசதி இருக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் தண்ணீர் வசதி அமைத்து தந்து அதை அரசிற்கு உறுதி செய்ய வேண்டும் என்றும் அமைச்சர் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு விடுத்துள்ளார்.
மேலும் மாநில கல்வி கொள்கை அறிக்கை முதல்வரிடம் கூடிய விரைவில் சமர்ப்பிக்கப்படும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.