டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்ட அதிரடி உத்தரவு! இனி யாரும் இதில் இருந்து தப்ப முடியாது!
டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருவண்ணாமலையில் நான்கு ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து சுமார் 75 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள்களை பிடிக்க எட்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
அதன் காரணமாக மாநிலம் முழுவதும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வங்கி மற்றும் ஏடிஎம் மையங்களில் பாதுக்காப்பை உறுதி படுத்த வேண்டும் என்பதற்காக மறைமுக கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் அந்த கேமரா மூலமாக முகத்தை அடையாளம் காணும் வகையில் மென்பொருள் அடங்கிய கேமராக்கள் அனைத்து ஏடிஎம் மையங்களிலும் பொறுத்த வேண்டும் என டிஜிபி தெரிவித்துள்ளார். ஏடிஎம் இயந்திரங்களில் எச்சரிக்கை மணி சம்பவ இடத்திலும் அந்தந்த பகுதி காவல் நிலையத்திலும் ஒழிக்கும் வகையில் பொருத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.