மத்திய அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!
மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் உயர் ஊதியம் பெற்று கடந்த 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் ஒன்றாம் தேதிக்கு முன்பாக ஓய்வு பெற்றவர்கள் ஓய்வுதியத்திற்கு தகுதியானவர்கள் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு இது தொடர்பாக வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உயர் ஊதியம் பெற்று ஓய்வூதியத்துக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இம்மாதம் மூன்றாம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் ஊழியர்கள் மற்றும் வேலை அளிப்போர் கால அவகாசம் வழங்க கோரிக்கை விடுத்தனர்.
அவ்வாறு வரவேற்கப்பட்ட கோரிக்கைகளை ஏற்று தற்போது விண்ணப்பங்களை அழிப்பதற்கான கால அவகாசம் வரும் மே மாதம் மூன்றாம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது. மேலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் தற்காலிக ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் உயர்த்தி வழங்கப்படும் என தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி புதிதாக 144 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர் அதனால் 415 தற்காலிக ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.