உயர் நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! இனி கோவிலுக்குள் செல்போன் எடுத்து செல்ல அனுமதியில்லை!

Photo of author

By Parthipan K

உயர் நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! இனி கோவிலுக்குள் செல்போன் எடுத்து செல்ல அனுமதியில்லை!

இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஒரு சில கோவில்களில் பெரும்பாலும் செல்போன் கொண்டு செல்லவோ அல்லது புகைப்படங்கள் எடுக்கவோ அனுமதி கிடையாது.அந்த வகையில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் அர்ச்சகராக பணியாற்றும் சீதாராமன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார்.அந்த மனுவில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

மேலும் அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ,திருச்செந்தூர் முருகன் கோவிலில் இனி செல்போன் பயன்படுத்த கூடாது.என  உத்தரவு பிறப்பித்தனர்.இந்நிலையில் பக்கதர்கள் மட்டுமல்லாமல் அர்ச்சகர்கள் உட்பட யாரும் கோவிலிற்குள் செல்போன் பயன்படுத்த கூடாது.இந்த தடையை மீறி செல்போன் பயன்படுத்தினால் செல்போன் பறிமுதல் செய்யப்படும்.பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள் மீண்டும் ஒப்படைக்க முடியாது என உத்தரவிட்டனர்.

மேலும் திருச்செந்தூர் முருகன் கோவிலில் செல்போன் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை உடனடியாக அமல் படுத்த இந்து அறநிலையத்துறை ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.கோவிலிற்குள் சென்று செல்பி எடுப்பது ,வீடியோ எடுப்பது போன்ற செயல்களை கண்காணித்து அதனை தடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.