உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! இவர்களுக்கு இனி ஆசிரியர் பணி இல்லை!

0
227
Action order issued by the High Court! They no longer have a teaching job!
Action order issued by the High Court! They no longer have a teaching job!

உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! இவர்களுக்கு இனி ஆசிரியர் பணி இல்லை!

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அரசுப்பள்ளி இடைநிலை ஆசிரியையாக பணிபுரிந்து வந்தவர் நித்யா.இவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.அந்த வழக்கானது தனக்கு பதவி உயர்வு வேண்டும் என்பது தான்.

இந்த வழக்கானது நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியன் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.அதில் தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் கூறுகையில் ஆசிரியை நித்யா,பி.எட் தமிழில் படித்தார் அதன் பிறகு தான் பி.ஏ ஆங்கிலம் படித்துள்ளார்.

மேலும் இந்த பி.ஏ படிப்பு தொலைதூரக் கல்வியில் படித்துள்ளார்.அதனால் அவருக்கு எப்படி ஆங்கில ஆசிரியை பிரிவில் பதவி உயர்வு வழங்க முடியும் என கேள்வி எழுப்பினார்.

அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் ஆசிரியை நித்யா தமிழ் ஆசிரியை பிரில் மட்டும் விண்ணப்பிக்கலாம் என கூறினார்கள்.அதனை தொடர்ந்து கல்வி நிறுவனங்களுக்கு நேரில் சென்று படித்தவர்கள் தான் ஆசிரியர்களாக நியமனம் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் வலியுறுத்தி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தொலைதூர கல்வி நிறுவனங்களில் பயின்றவர்கள் பெரும்பாலும் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்களாக பயின்று வருகின்றனர்.இந்த நடைமுறையை மாற்றி அமைக்க வேண்டும்.

தொலைத்தூரக்கல்வியில் படித்தவர்கள் ஆசிரியர் பணியில் நியமனம் செய்வதில் ஒரு பயனும் இல்லை.என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் கல்வி நிறுவனங்களுக்கு நேரில் சென்று படித்தவர்களையே ஆசிரியராக நியமனம் செய்ய வேண்டும் என  உத்தரவிட்டுள்ளனர்.

இந்நிலையில் தற்போது தொலைதூரக் கல்வியில் படித்தவர்கள் ஆசிரியர் பணியில் இருப்பது வருத்தம் அளிக்கும் விதமாக உள்ளது என கூறியுள்ளனர்.மேலும் தொலைதூரக் கல்வியில் படித்தவர்களை ஆசிரியர்களாக நியமனம் செய்யும் நடைமுறைகளை தமிழக அரசு மூன்று மாதங்களில் மறுஆய்வு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.

Previous articleஅவர் இருக்கும் வரை கட்சி விளங்கப்போவதில்லை.. கட்சியை விட்டு பிரியா விடை பெரும் உங்கள் தம்பி திருச்சி சூர்யா! 
Next articleஇந்த நாட்களில் கனமழை வெளுத்து வாங்க உள்ளது! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்!