உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! தமிழகத்தில் உள்ள கோவில்களில் இதனை கட்டாயம் கண்காணிக்க வேண்டும்!
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பாஜக செயலாளர் சித்ரங்கநாதன் உயர் நீதிமன்ற கிளையில் கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மனு தாக்கல் செய்திருந்தார்.அந்த மனுவில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா வழக்கமாக அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை நடைபெறும்.அதனை தொடரந்து 30 ஆம் தேதி சூரசம்ஹாரம் நடைபெறும்.
அப்பொழுது திருச்செந்தூர் முருகன் கோவிலில் உள் பிரகாரத்தில் பக்தர்கள் தங்கி விரதம் இருப்பார்கள்.இந்த வருடம் திருச்செந்தூர் முருகன் கோவிலில் உள் பிரகாரத்தில் பக்தர்கள் தங்கி விரதம் இருக்க அனுமதி அளிக்கவில்லை.மேலும் இந்த மனு நீதிபதிகள் ஆர் மகாதேவன், ஜெ சத்ய நாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் திருச்செந்தூர், பழனி, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் ராமேஸ்வரம் போன்ற கோவில்களில் திருப்பதி கோவிலில் உள்ள கட்டுபாடுகளைபோல கொண்டு வர வேண்டும் என கூறப்பட்டது.இந்நிலையில் தமிழகத்தில் உள்ள கோவில்களில் பெயர்களில் இயங்கி வருகின்றது.
அவ்வாறு இயங்கி வரும் இணையதளங்களை முறைப்படுத்த 12 வழிகாட்டு நெறிமுறைகளை உயர்நீதிமன்றம் மதுரை கிளை,திருப்பதி,சபரிமலை கோவில்களை போல தமிழகத்தில் உள்ள கோவில்களின் செயல்பாடுகளை வெளிப்படை தன்மையை உறுதி செய்ய வேண்டும்.அதனை தொடர்ந்து போலி இணையதளங்களை இயக்குபவர்கள் மீது உரிமையியல் குற்றவியல் வழக்கு தொடர வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.