இந்தியாவில் இயக்கப்படக்கூடிய அனைத்து ரயில்களிலும் முன்பதிவில்லாத பெட்டிகளின் எண்ணிக்கையானது 4 பெட்டிகளில் இருந்து 2 பெட்டிகளாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி ரயிலில் பயணிக்க கூடிய பயணிகளுக்கு வருத்தத்தை அளிப்பதாக அமைந்திருக்கிறது.
முன்கூட்டியே எந்தவித அறிவிப்பும் இன்றி திடீரென நேற்று பிப்ரவரி 21 அன்று இந்த தகவலானது வெளியிடப்பட்டு இருப்பது அதிர்ச்சியை தந்த பொழுதிலும் அதற்கான காரணமாக இந்திய ரயில்வே கூறி இருப்பது, பல மாநிலங்களில் உள்ள ரயில்களில் முன்பதிவு இல்லா பெட்டிகளில் கூட்ட நெரிசல்கள் காரணமாக பலரும் முன்பதிவு செய்த பெட்டிகளில் பயணம் செய்கின்றனர் என்ற குற்றச்சாட்டை தொடர்ந்து இந்த முடிவானது மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், முன்பதிவு இல்லா பெட்டிகளில் பயணிக்க கூடிய பயணிகள் முன்பதிவு செய்த பெட்டிகள் மட்டுமல்லாது ஏசி பெட்டிகளிலும் பயணிக்க கூடிய நிலை உருவாகி வருவதால் ஏசி பெட்டிகளில் பயணிக்க கூடியவர்கள் இது குறித்து அஞ்சுவதாகவும் ஒரு வேலை முன்பதிவுல்லா பெட்டிகளில் பயணம் செய்யக் கூடியவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை என்றால் ரயில்களை சேதப்படுத்தக்கூடிய சம்பவங்கள் கூட ஒரு சில மாநிலங்களில் அவ்வப்போது நடைபெறுகிறது என்றும் ரயில்வே துறையை தெரிவித்திருக்கிறது.
முதற்கட்டமாக 26 ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளை குறைத்து அதனை ஈடு செய்யும் விதமாக AC 3 Tier என்ற பெட்டிகளை இணைக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாக இந்தியன் ரயில்வே தெரிவித்திருக்கிறது. இதில் சென்னையில் இருந்து அரக்கோணம் காட்பாடி ஜோலார்பேட்டை வழியாக செல்லும் ரயில்களில் நேற்று முதல் முன்பதிவில்லாத பெட்டிகள் குறைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.