சிபில் ஸ்கோர் ஆனது வங்கிகளில் இருந்து கடன் பெறக்கூடிய தகுதியினை தீர்மானிக்கும் ஒன்றாக பொதுமக்களுக்கு அமைந்திருக்கிறது.இந்த நிலையில், பொதுமக்களுக்கு சிறப்பான சேவையை வழங்கும் நோக்கில் ரிசர்வ் வங்கி சில புதிய விதிகளை அறிவித்துள்ளது.
சிபில் ஸ்கோர் குறித்து இந்தியன் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள புதிய மாற்றங்கள் :-
1 . கோரிக்கையை நிராகரிப்பதற்கான காரணம் :-
வங்கிகள் மற்றும் NBFC-க்கள் (Non Banking Financial Company) வாடிக்கையாளர்களின் கடன் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது ஏன் என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும். இதன் மூலம், வாடிக்கையாளர்கள் தாங்கள் கடன் பெறுவதற்கு தடையாக இருக்கும் காரணிகளை தெரிந்துக்கொள்ள மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 . முழு வருட அறிக்கையையும் ஆண்டிற்கு ஒரு முறை இலவசமாக பெரும் வசதி :-
வாடிக்கையாளர்கள் ஆண்டுக்கு ஒரு முறை தங்களின் முழு கடன் சிபில் ஸ்கோரையும் மற்றும் கடன் வரலாற்றையும் எளிதாக அணுகும் வகையில் வங்கிகள் மற்றும் ஃபைனான்சியல் நிறுவனங்களின் வலைத்தளங்களில் ஒரு லிங்கை வழங்க ரிசர்வ் வங்கி மூலம் உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது.
3 . சிபில் ஸ்கோர் குறித்து கார் அளிப்பதற்கு முன் வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்தும் வசதி :-
வங்கிகள் வாடிக்கையாளர்கள் மீதுள்ள ஒரு தவறை வெளிப்படுத்துவதற்கு முன்பு அது குறித்து ரிசர்வ் வங்கியிடம் புகார் அளிப்பதற்கு முன்பு அது குறித்து வாடிக்கையாளர்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அதாவது, வாடிக்கையாளர்களை எஸ்எம்எஸ் அல்லது இமெயில் மூலம் தொடர்புக்கொண்டு அது குறித்து வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும். இது தங்கள் மேலுள்ள தவறுகளை திருத்திக் கொள்வதற்கான வாய்ப்பாக அமையும் என்றும் ஆர்பியை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 . 100 ரூபாய் தினசரி அபராதமாக வழங்கப்படுதல் :-
வாடிக்கையாளர்களுக்கு தங்களது கடன் மதிப்பெண் குறித்து உடனடியாக தகவல் தெரிவிக்கப்படும். அதாவது, வாடிக்கையாளர்களின் கடன் தகவல் குறித்த புகார்கள் 30 நாட்களில் தீர்க்கப்படவில்லை என்றால், கடன் தகவல் வழங்கும் நிறுவனம் அந்த சிக்கல் சரிசெய்யப்படும் வரை கடன் குறித்து விவரம் கேட்ட வாடிக்கையாளருக்கு நாள்தோறும் ரூ.100 வழங்க வேண்டும் எனவும் ஆர்பிஐ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விதிகள் வாடிக்கையாளர்களுக்கு கடன் மற்றும் கடன் மதிப்பெண்கள் குறித்து அதிக பாதுகாப்பு மற்றும் தெளிவை வழங்குவது பயனர்களுக்கு எளிதான செயல்முறையாகும்.