மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை போக்குவரத்து காவல்துறையினரின் உதவி எண்ணிற்கு டிசம்பர் 6 ஆம் தேதி அன்று whatsapp மூலம் குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது.
அந்த குறுஞ்செய்திகள் வந்த தகவலானது :-
இரண்டு ஐ.எஸ்.ஐ. பயங்கரவாதிகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், பிரதமர் மோடியை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த மிரட்டலை தொடர்ந்து மும்பை காவல்துறையினர் குறுஞ்செய்தி அனுப்பியவரின் இருப்பிடத்தை கண்டறியும் பணியில் ஈடுபட்டபோது அந்த குறுஞ்செய்தி ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீரில் இருந்து அனுப்பப்பட்டிருந்தது என்பதை கண்டுபிடித்தனர்.
மேலும், சம்பந்தப்பட்ட நபரை பிடிப்பதற்காக தனிப்படை போலீசார் ராஜஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.இந்த குறுஞ்செய்தியை அனுப்பியவர் மனநலம் பாதிக்கப்பட்டவராகவோ, அல்லது மதுபோதையிலோ இருக்கலாம் என்று சந்தேகிப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
குறிப்பு :-
மும்பை போலீசாரின் உதவி எண்ணிற்கு ஏற்கனவே இதுபோன்ற மிரட்டல் குறுஞ்செய்திகள் அடிக்கடி வருவது குறிப்பிடத்தக்கது என்றும் தெரிவித்துள்ளனர்.
அரசியல் சம்பந்தப்பட்ட நபர்களுக்கும் உயர்ந்த பதவியில் உள்ளவர்களுக்கும் இது போன்ற கொலை மிரட்டல்கள் வந்து கொண்டு இருக்கின்றன என்றும், பிரதமர் அவர்களுக்கு இவ்வாறு கொலை மிரட்டல் வந்தது குறித்து விசாரிப்பதுடன் அவருக்கான பாதுகாப்பு வழிமுறைகளும் பின்பற்றப்படுகின்றன என மும்பை காவல் துறையினர் தெரிவித்து இருக்கின்றனர்.