ஈரோடு மாவட்டத்தில் இளைஞர்கள் சேர்ந்து கும்பலாக அரங்கேற்றிய செயல்! போலீசார் வழக்கு பதிவு!

Photo of author

By Parthipan K

ஈரோடு மாவட்டத்தில் இளைஞர்கள் சேர்ந்து கும்பலாக அரங்கேற்றிய செயல்! போலீசார் வழக்கு பதிவு!

Parthipan K

Updated on:

action-staged-by-youths-together-in-erode-district-police-registered-a-case

ஈரோடு மாவட்டத்தில் இளைஞர்கள் சேர்ந்து கும்பலாக அரங்கேற்றிய செயல்! போலீசார் வழக்கு பதிவு!

ஈரோடு மாவட்டத்தில் அந்தியூர் பகுதியில் நேற்று காலை அந்தியூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்தியூரில் இருந்து மலை கருப்புசாமி கோவில் செல்லும் வழியில் உள்ள மாணுவபூமி  என்ற இடத்தில் இளைஞர்கள் கூட்டமாக அமர்ந்திருந்தனர்.

போலீசார் அங்கு சென்று பார்த்த போது அந்த இளைஞர்கள்  போதை மாத்திரையை தண்ணீரில் கரைத்து சிரஞ்சில் மூலமாக உடலில் செலுத்திக் கொண்டிருந்தனர். அப்போது போலீஸார்கள் 5 பேரை சுற்றி வளைத்து பிடித்தனர்.

மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் தவிட்டுப்பாளையத்தை  சேர்ந்த சந்தோஷ் குமார் (23),சசிகுமார் (28), யுவராஜ் (30), விக்னேஷ் (27), யுவராஜ் என்பது தெரிய வந்தது. அவர்களை கைது செய்த அந்தியூர் போலீசார் அவர்களின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அவர்களுக்கு போதை மாத்தரைகளை சப்ளை செய்த பாலாஜி மற்றும் கண்ணன் ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர். போதை மாத்திரை  பயன்படுத்திய ஐந்து பேரும் 30 வைத்திருக்கும் உட்பட்ட இளைஞர்கள்  என்பது குறிப்பிடத்தக்கது.