தனியார் மற்றும் அரசு பள்ளி / கல்லூரிகளில் நிரந்தர அல்லது தற்காலிக பணியாளர்கள் வேலைக்கு எடுக்கப்படும் பொழுது கட்டாயமாக காவல்துறை சரி பார்த்து சான்றிதழை வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. மேலும் இதனை தொடர்ந்து பாலியல் பிரச்சனைகளில் பெண் பிள்ளைகள் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதற்கு முறையான வழிமுறைகளையும் அறிவுறுத்தியிருக்கிறது.
தமிழக அரசு வெளியிட்டு இருக்கக்கூடிய வழிமுறைகள் :-
✓ பள்ளிகளில் வேலை செய்யக்கூடிய அனைவரும் குழந்தை பாதுகாப்பு உறுதிமொழி ஆவணத்தில் கட்டாயமாக கையெழுத்திட்டிருக்க வேண்டும்.
✓ தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் பயிலக்கூடிய மாணவிகளுக்கும் சுய பாதுகாப்பு கல்வியை கற்றுக் கொடுத்தல் அவசியம்.
✓ மாணவிகள் இருக்கக்கூடிய சூழல் பாதுகாப்பானதாக உள்ளதா அல்லது அதில் இருக்கக்கூடிய பிரச்சனைகளை எவ்வாறு ஒருவரிடம் தெரிவிப்பது போன்ற செயல்முறைகளை தமிழக அரசு மூலம் நியமிக்கப்பட்ட முதன்மை பயிற்சியாளர்கள் ஆசிரியர்களுக்கும் ஆசிரியர்கள் மாணவிகளுக்கும் தெரியப்படுத்துதல் அவசியம்.
✓ ஆசிரியர்கள் பயிலக்கூடிய பாடத்திட்டங்களில் கட்டாயமாக குழந்தைகளுக்கு நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து இடம்பெறல் வேண்டும்.
✓ குறிப்பாக மாணவிகள் பயணம் செய்யும் பொழுது மற்றும் உடற்பயிற்சி நேரங்களில் மாணவிகளுக்காக பெண் உடற்பயிற்சியாளர்கள் நியமனம் செய்தல் வேண்டும்.
இது போன்ற பல முக்கிய வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது. கட்டாயமாக இவற்றில் உள்ள அனைத்தையும் தமிழகத்தில் இருக்கக்கூடிய தனியார் பள்ளிகள் மற்றும் அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் என அனைவரும் பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.