TVK: முக்குலத்தோர் மற்றும் வன்னியர் ஓட்டுகளை கவர விஜய் எடுத்த அதிரடி நடவடிக்கை!! 

Photo of author

By Rupa

TVK: விஜய் மாநாட்டில் வீர மங்கைகளின் கட்டவுட்டும் வைப்பதாக முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வரும் ஞாயிற்றுக்கிழமை விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக எந்த ஒரு அரசியல் மாநாட்டிலும் இல்லாத வண்ணம் ரேம்ப் ஒன்றையும் அமைத்துள்ளனர். இவ்வாறு இருக்கையில் மாநாடு வருபவர்களுக்கு பலவித முன் நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டும் வருகிறது.

குறிப்பாக மாநாட்டிற்கு வருபவர்கள் பேருந்து மேல் உட்கார்ந்து வரக்கூடாது என்றும் அருகில் மின்கம்பம் இருப்பதால் பெரிய அளவில் எந்த ஒரு கொடியும் கொண்டுவரக் கூடாது என கூறியுள்ளனர். இவ்வாறு இருக்கையில் தவெக மாநாட்டில் விஜய்யின் கட் அவுட்டின் அருகில் பெரியார் அம்பேத்கார் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

இதனிடையே வீர மங்கைகளான வேலுநாச்சியார், அஞ்சலையம்மாள், உள்ளிட்டோரின் கட்டவுட்டும் வைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முதலில் அம்பேத்கர் கட்டவுட் வைத்ததற்கு அரசியல் வட்டாரத்தில் இவர் கட்டாயம் தலித்துடன் குறிப்பாக திருமாவளவனுடன் கூட்டணி வைக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறினர்.

தற்பொழுது வீர மங்கைகளின் கட்டவுட் அடுத்தப்படியாக இருக்கும் பட்சத்தில் ஒரு பக்கம் பெண்களின் வாக்கு வங்கியை கவரும் விதமாகவும் மற்றொரு பக்கம் சாதிவாரியான பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இதை செய்யலாம் என கூறுகின்றனர்.

இருப்பினும் 20 சதவிகிதம் பட்டியலினத்தவர் ஓட்டுக்களை கொண்டு வர அம்பேத்கர் போஸ்டர் இருந்தாலும் இதனை தாண்டி விஜய்க்கு முக்குலத்தோர் மற்றும் வன்னியர்களின் ஓட்டுகளும் மிகவும் முக்கியமான ஒன்று என்பதை காட்ட இந்த வீரமங்கைகளின் கட்டவுட் அமைக்கப்படலாம் என நெட்டிசன்கள் கூறுகின்றனர்.