சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சத்தை ஒழிக்க அதிரடி முடிவு!! இனி எல்லாமே மக்கள் கையில்!!

தமிழகத்தில் இருக்கக்கூடிய பத்திரப்பதிவுத்துறைகளில் லஞ்சமானது தலை குறித்து ஆடக்கூடிய நிலையில் அதனை முழுவதுமாக ஒழிக்க தமிழக அரசு புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கிறது.

 

அதாவது, பத்திரப்பதிவு செய்ய நினைப்பவர் யார் என்ற பகுதியில் ஆவண எழுத்தாளர் அல்லது வக்கீல் ஆகியோருக்கு பதிலாக சுய பதிவு என்பதனை குறிப்பிட வேண்டும் என்றும் இதை குறிப்பிட்டதும் ஆவணம் உருவாக்கிவிடும் என்றும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலமாக இனி யாருக்கும் லஞ்சம் கொடுக்காமல் பத்திரப்பதிவு செய்ய நினைப்பவர்கள் தங்களுடைய ஆவணங்களை தாங்களாகவே உருவாக்கிக் கொள்வதற்கான முன்னெடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் ஆவணம் உருவாக்கிய பின்பு ஆவணத்திற்குரிய அரசு கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பெண் நாள் நேரத்தை முடிவு செய்து ஆவணத்தை சார்பதிவாளர் அலுவலகத்தில் கொடுத்து ஆஜராகி வழக்கம் போல் பத்திரப்பதிவு மேற்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

 

தமிழக அரசினுடைய பத்திர பதிவுத்துறையில் லஞ்சம் அதிகமாக பொருளுவதால் பத்திர பதிவு செய்ய நினைப்பவர்கள் மிகப்பெரிய நெருக்கடியை சந்திப்பதாகவும் பத்திரப்பதிவுத்துறையில் வெளிப்படை தன்மை வேண்டும் என்பதற்காக அரசு இதுபோன்ற ஒரு நடவடிக்கை எடுத்துருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் 1975 ஆம் ஆண்டு முதல் வில்லங்க சான்றிதழ் மற்றும் 1950 ஆம் ஆண்டு முதல் நகல் பத்திரங்களை எளிதாக அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலமாக தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

✓ https://tnreginet.gov.in

 

பத்திரபதிவு துறையோடு திருமண பதிவு நடைமுறையும் தற்பொழுது எளிமையாக்கப்பட்டிருப்பதாகவும் பொதுமக்கள் நேரடியாகவே விண்ணப்பித்து சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இதுவரையில் நிலம் வீடு போன்ற சொத்துக்களை பதிவு செய்ய பத்திர எழுத்தாளர்கள் வகைகள் மூலமே ஆவணங்கள் பதிவு செய்யும் நிலை தற்பொழுது முற்றிலுமாக மாற்றப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக பத்திர பதிவு செய்ய நினைப்பவர்கள் தங்களுடைய ஆவணங்களின் வகை குறிப்பாக விற்பனை ஆவணம் தான செட்டில்மெண்ட் பாகப்பிரிவினை போன்றவற்றை முதலில் பதிவு செய்ய வேண்டும் என்றும் அதனை தொடர்ந்து விற்பவர் பெயர் வாங்குபவர் பெயர் நிலம் அமைந்திருக்கக்கூடிய பத்திரப்பதிவு அலுவலகம் கிராமம் சர்வே எண் நிலத்தின் அளவு போன்றவற்றை பதிவு செய்தால் ஆவணம் உருவாக்கிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.