நீட் தேர்வில் வந்த அதிரடி திருப்பம்! மகிழ்ச்சியில் மாணவர்கள்!

Photo of author

By Rupa

நீட் தேர்வில் வந்த அதிரடி திருப்பம்! மகிழ்ச்சியில் மாணவர்கள்!

2016 ஆம் ஆண்டு மே 24-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியின் ஒப்புதல் பெற்று அவசர சட்டம் நீட் தேர்வுக்கு கொண்டுவரப்பட்டது.அதைத் தொடர்ந்து நிரந்தரமாக நீட் தேர்வு நடத்துவதற்கான பிறப்பிதல் 19,ஜூலை 2016 ஆண்டு நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து தமிழகத்தில் 2017-2018 முதல் நீட் தேர்வு நடத்தப்பட்டது.இதில் 9,154 நீட் தேர்வு எழுதினர்.அவற்றில் 1,337 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர் .ஒவ்வொரு ஆண்டும் குறைந்த அளவே ஆன மாணவர்கள் மட்டும் தேர்ச்சி பெறுகின்றனர்.

இதனால் மாணவர்கள் மன உளைச்சளுக்கு தள்ளப்படுகிறார்கள்.ஒரு சில மாணவர்கள் தற்கொலை செய்துக்கொள்ளவும் தயங்குவதில்லை.இதனால் மருத்தவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வை இந்த ஆண்டு முதல் ,1 ஆண்டிற்கு 2 முறை நீட் தேர்வு நடத்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஆணை பிறப்பித்துள்ளது.

தொழில்நுட்ப படிப்பிற்கான ஜேஇஇ நுழைவு தேர்வு ஆண்டுக்கு இருமுறை நடக்கும் என 2019 ஆம் ஆண்டு விதிமுறை அமலுக்கு வந்தது.இதனால் மாணவர்களின் கவலை மற்றும் தற்கொலை எண்ணமும் குறைந்தது.

இதே நடைமுறை நீட் தேர்விலும்  கொண்டுவரப்படுகிறது. எம்பிபிஎஸ், பிடிஎஸ்,இவைகளின் நீட் தேர்வு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடந்து வந்தது.இந்த ஆண்டு முதல் இரண்டு முறை நடத்தபோவதாக மத்திய சுகாதாரத்துறை ஒப்புதல் அளித்துள்ளது.

நடக்க இருக்கும் இந்த இரண்டு தேர்வுகளில் ஒரு தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம் என சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இவற்றால் மாணவர்களின் மனஉளைச்சல் மற்றும் தேர்வை எதிர் கொள்ளும் பயத்தையும் குறைக்க முடியும்.இதனால் தற்கொலைகளும் குறைய அதிக அளவில் வாய்புகள் உள்ளது.