இன்று மாலை 6 மணிக்கு மேல் இதை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும்!

Photo of author

By Parthipan K

இன்று மாலை 6 மணிக்கு மேல் இதை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும்!

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் வருகின்ற 19-ம் தேதி (நாளை மறுநாள்) ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலுக்கான வாக்குபதிவு முடிந்து இரண்டு நாட்கள் கழித்து, பிப்ரவரி 22-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜனவரி 28-ந் தேதி தொடங்கி கடந்த 4-ந் தேதியுடன் நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர். இதனால் தேர்தல் பிரச்சாரம் களைகட்டியுள்ளது.

தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் அனைவரும் கடைசி கட்ட தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரம் விறுவிறுப்படைந்துள்ளது.

மேலும், இன்று மாலை 6 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தேர்தல் நடைபெறும் வார்டுகளுக்கு தொடர்பு இல்லாதவர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்றும் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனிடையே, நேற்று தேர்தல் அணையர் பழனிகுமார் தலைமையில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்தும், வாக்குச்சாவடி மற்றும் வாக்கு எண்ணும் மையங்களின் பாதுகாப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும், சட்டம், ஒழுங்கு பாதுகாப்பு குறித்தும், வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பாக எடுத்து செல்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

தேர்தல் நடைபெறும் 19ம்  தேதியன்று காலை 7 முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கொரோனா பாதித்தவர்களுக்காக மாலை 5 மணி முதல் 6 மணி வரை  வாக்களிக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.