பண வரவு ஏற்பட 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய செயல்கள் மற்றும் பூஜைகள்..!!

Photo of author

By Janani

பண வரவு ஏற்பட 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய செயல்கள் மற்றும் பூஜைகள்..!!

Janani

எவ்வளவு சம்பாதித்தாலும் கையில் பணம் தங்குவதே இல்லை, செலவு அதிகரித்து கொண்டே போகிறது, பணப் பற்றாக்குறை இருந்து கொண்டே இருக்கிறது, பணத்தை சேமிக்கவே முடியவில்லை என்பது தான் பெரும்பாலானவர்களுக்கு இன்று இருக்கும் பெரிய பிரச்சனையாக உள்ளது.

இன்னும் சிலருக்கு கடனாக கொடுத்த பணம் எவ்வளவு முயற்சி செய்தும் கைக்கு வர மாட்டேன் என்கிறது, வாங்கின கடனை எவ்வளவு முயற்சி செய்தாலும் திரும்ப அடைக்க முடியவில்லை இப்படி பணம் தொடர்பான பிரச்சனைகள் இருப்பவர்கள், பண வரவு அதிகரிக்க வேண்டும், மகாலட்சுமியின் அருட் பார்வை எப்போதும் நிலையாக கிடைக்க வேண்டும் என்பவர்கள் தங்களின் ராசிக்கு ஏற்ற ஆன்மிக பரிகாரங்களை முறையாக செய்து வந்தாலே பண வசியம் என்பது ஏற்படும்.

1. மேஷம்:

மேஷ ராசிக்காரர்கள் வாரம் ஒரு முறை செவ்வாய்க் கிழமை அன்று சிவன் கோவிலுக்கு சென்று அபிஷேகத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து வருவதால் உங்களுடைய வருமானத்தில் இருக்கும் தடைகள் நீங்கும். செல்வ செழிப்பு ஏற்படும்.

அதேபோன்று மேஷ ராசிக்காரர்கள் தினமும் மாலை வேளையில் வீட்டின் தலை வாசலில் கடுகு எண்ணெய் தீபம் ஏற்றி வந்தால் விரைவில் பணக்காரர் ஆகலாம்.

2. ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்கள் தினமும் இரவு நேரத்தில் வீட்டில் பூஜை அறையில் இரண்டு நெய் தீபம் ஏற்றி வந்தால் விரைவில் பணக்காரர் ஆகலாம். அதேபோன்று பசுவிற்கு உங்களால் முடிந்த தீவனங்கள் மற்றும் வாழைப்பழங்களை தானமாக கொடுக்கலாம்.

3. மிதுனம்:

மிதுன ராசிக்காரர்கள் தங்களின் பூஜை அறையில் வலம்புரி சங்கு வைத்து வழிபட்டு வந்தால் விரைவில் பணக்காரர்கள் ஆகலாம்.அது போல் வீட்டுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு வளையல் மற்றும் மஞ்சள், குங்குமம் கொடுத்து வழி அனுப்புவதை வழக்கமாக்கிக் கொள்ளலாம்.

4. கடகம்:

கடக ராசிக்காரர்கள் தினமும் மாலை நேரத்தில் அரச மரத்தின் அடியில் ஐந்து எண்ணெய் கலந்த பஞ்ச தீப எண்ணெய் ஊற்றி விளக்கு ஏற்றி வந்தால் விரைவில் பணக்காரர் ஆகலாம்.உங்கள் வீட்டில் வெளிப்புறமான இடங்களில் அல்லது மொட்டை மாடிகளில் மண் சட்டியில் தண்ணீரை எப்பொழுதும் நிரப்பி வையுங்கள்.

அதனை குடிக்க வரும் பறவைகளுக்கு தாகம் தீர்ந்தால் போதும். உங்களுடைய கஷ்டங்கள் எல்லாம் நீங்கி, செல்வ செழிப்பு உண்டாகும்.

5. சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்கள் தினமும் இரவு நேரத்தில் வீட்டின் பூஜை அறையில் ஒரு அகல் விளக்கில் பசு நெய் ஊற்றி தீபம் ஏற்றி வந்தால் விரைவில் பணக்காரர் ஆகலாம்.இரவு தூங்கும் பொழுது தலைக்கு பக்கத்தில் ஒரு செம்பு சொம்பில் தண்ணீரை நிரப்பி வைத்துக் கொள்ளுங்கள்.

மறுநாள் காலையில் அந்தத் தண்ணீரை உங்கள் வீட்டின் கிழக்குப் பகுதியில் தெளிக்க வேண்டும். இதனால் தோஷங்கள் நீங்கி வருமானம் பெருகும் என்பது ஐதீகம்.

6. கன்னி:

கன்னி ராசிக்காரர்கள் ஒரு முழு தேங்காயை சிவப்பு நிற துணியில் கட்டி, பூஜை அறையில் வைத்து வழிபட்டு வந்தால் விரைவில் பணக்காரர்கள் ஆகலாம். கோவிலில் இருக்கும் பசுக்களுக்கு வெல்லம் கலந்த கோதுமை மாவு கொடுப்பது செல்வ செழிப்பை ஏற்படுத்தும்.

7. துலாம்:

துலாம் ராசிக்காரர்கள் வெள்ளிக்கிழமை தோறும் லட்சுமி கோவிலுக்கு சென்று தேங்காயால் செய்த இனிப்புகள் படைத்து, அதை தானம் செய்து வந்தால் விரைவில் பணக்காரர் ஆகலாம்.

திங்கள் கிழமை தோறும் அபிஷேகப் பிரியரான சிவபெருமானுக்கு இளநீர், பசும்பால், பன்னீர் போன்றவற்றை உங்களால் முடிந்த அளவிற்கு தானம் செய்யலாம்.

8. விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்கள் வீட்டில் வாழை மரம் நட்டு வைத்து வளர்த்து வந்தால் விரைவில் பணக்காரர் ஆகலாம்.முருகன் கோவிலுக்கு சஷ்டி நாட்களில் அபிஷேகப் பொருட்கள் மற்றும் கடலை பருப்பு நைவேத்தியம் செய்வது நல்ல ஒரு அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும்.

9. தனுசு:

தனுசு ராசிக்காரர்கள் லட்சுமிக்கு 108 வெற்றிலையில் குங்குமம் தடவி வீட்டிலோ அல்லது கோவிலிலோ அர்ச்சனை செய்து வந்தால் விரைவில் பணக்காரர் ஆகலாம்.ஐந்து முக குத்து விளக்கு ஒன்றில் தாமரை தண்டு திரியை போட்டு, நெய் தீபம் ஏற்றிவர வருமானத்தில் இருக்கும் தடைகள் எல்லாம் நீங்கும்.

10. மகரம்:

மகர ராசிக்காரர்கள் தினமும் வீட்டின் வடகிழக்கு மூலையில் ஐந்து எண்ணெய் கலந்த பஞ்ச தீப எண்ணெய் ஊற்றி விளக்கு ஏற்றி வந்தால் விரைவில் பணக்காரர் ஆவார்கள்.மகர ராசிக்காரர்கள் துளசிச் செடியை வளர்ப்பது யோகம் தரும். கட்டாயம் இதை செய்யுங்கள். துளசிச்செடி இல்லாதவர்கள் பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி நல்லெண்ணை தீபம் ஏற்றி வரலாம்.

11. கும்பம்:

கும்ப ராசிக்காரர்கள் வெள்ளிக்கிழமை தோறும் தேங்காயை உடைத்து இரு தேங்காய் மூடியில் விளக்கு ஏற்றி வந்தால் விரைவில் பணக்காரர் ஆகலாம்.கோவிலுக்கு சென்று நவகிரக சந்நிதியில் சனிபகவானுக்கு நேராக நிற்காமல், ஒரு புறமாக நின்று எள் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும்.

12. மீனம்:

மீன ராசிக்காரர்கள் வெள்ளிக்கிழமை தோறும் லட்சுமி கோவிலுக்கு சென்று தேங்காய் துருவல் படைத்து சம்பித்து வழிபட்டு வந்தால் விரைவில் பணக்காரர் ஆகலாம்.
வியாழக்கிழமையில் தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்து வருவது விசேஷமானது. உங்கள் ராசிக்கு குரு மற்றும் தட்சிணாமூர்த்தி செல்வ செழிப்பை கொடுப்பார்கள்.