பிரபல நடிகருக்கு இரண்டு கிட்னியும் செயலிழந்து விட்டது…  உதவி கேட்டு சக நடிகர் வீடியோ!

0
83

பிரபல நடிகருக்கு இரண்டு கிட்னியும் செயலிழந்து விட்டது…  உதவி கேட்டு சக நடிகர் வீடியோ!

தமிழ் சினிமாவில் நகைச்சுவை காட்சிகளில் நடித்து பிரபலமானவர் போண்டா மணி.

இலங்கையைச் சேர்ந்த நடிகரான போண்டாமணி தமிழகத்துக்கு புலம்பெயர்ந்து சினிமா வாய்ப்புகளுக்காக உழைத்து 1991 ஆம் ஆண்டு வெளியான பவுனு பவுனுதான் படத்தில் பாக்யராஜோடு நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் கதாபாத்திரம் பேசப்படவே அடுத்தடுத்து பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்தார்.

ஒரு கட்டத்தில் விவேக் மற்றும் வடிவேலு ஆகிய நடிகர்களோடு இணைந்து அவர்களின் குழுவில் ஒருவராக நடித்தார். இப்படி பல காட்சிகள் அவருக்கு ரசிகர்களின் ஆதரவைப் பெற்றுத் தந்தது. 100க்கும் மேற்பட்ட தமிழ்ப் படங்களில் அவர் நடித்துள்ளார். இந்நிலையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் அவர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அப்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு குணமாகி வீடு திரும்பினார். இந்நிலையில் இப்போது அவருக்கு மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் அவரின் சகநடிகரான பெஞ்சமின் “அவருக்கு மேல் சிகிச்சைக்கு உதவ யாராவது முனவரவேண்டும். அவரைக் காப்பாற்ற வேண்டும். இலங்கையில் இருந்து இங்கு வந்து கஷ்டப்பட்டு சினிமாவில் நடித்தார். இப்போது அவரது குடும்பத்தை அனாதையாக விட்டுவிட்டு அவர் சென்றுவிடக் கூடாது” என அழுதுகொண்டே பேசி உதவிக் கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இப்போது சமூகவலைதளங்களில் அதிகளவில் பரவி வருகிறது.