பிரபல காமெடி நடிகரின் மகன் மாவட்ட துணை ஆட்சியராக நியமனம்!!

Photo of author

By Jayachithra

பிரபல காமெடி நடிகரின் மகன் மாவட்ட துணை ஆட்சியராக நியமனம்!!

பிரபல காமெடி நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தூத்துக்குடி மாவட்ட துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் பிரபல காமெடி நடிகராக இருந்தவர் நடிகர் சின்னிஜெயந்த் இவருடைய மூத்த மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன். இவர் கடந்த ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் சாதனை படைத்தார். அந்த சிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் 75வது இடத்தை பெற்றார். இந்திய அளவில் நடைபெற்ற இந்தத் தேர்வில் மொத்தம் 829 மட்டுமே தேர்ச்சி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தூத்துக்குடி மாவட்டத்தின் மாவட்ட துணைக் ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, தமிழ்த் திரையுலகினர் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் சின்னிஜெயந்த் மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன் கல்வி மூலம் வெற்றி பெற்றிருப்பது திரையுலகிற்கு பெருமையாக இருக்கின்றது என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.