நடிகர் சேதுராமன் திடீர் மரணம்! 36 வயதில் ஏற்பட்ட சோகமான சம்பவம்; சினிமா துறையினர் அதிர்ச்சி!

Photo of author

By Jayachandiran

நடிகர் சேதுராமன் திடீர் மரணம்! 36 வயதில் ஏற்பட்ட சோகமான சம்பவம்; சினிமா துறையினர் அதிர்ச்சி!

Jayachandiran

நடிகர் சேதுராமன் திடீர் மரணம்! 36 வயதில் ஏற்பட்ட சோகமான சம்பவம்; சினிமா துறையினர் அதிர்ச்சி!

தமிழ் சினிமாவின் இளம் நடிகர் சேதுராமன் மாரடைப்பால் நேற்றிரவு திடீரென இறந்த சம்பவம் சினிமா துறையினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற திரைப் படத்தில் நடிகர் சந்தானத்துடன் தனது நடிப்பை காட்டியவர் சேதுராமன். இவர் தமிழ்திரையில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தாலும் மருத்துவராக பணிபுரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு உமையாள் என்ற பெண்ணுடன் திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை உள்ளது.

சினிமாவில் சக்கபோடு போடு ராஜா மற்றும் வாலிப ராஜா போன்ற படங்களில் நடித்த மருத்துவர் சேதுராமன், பெரிய அளவில் தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காத பட்சத்தில் தனது மருத்துவர் தொழிலை சிறப்பாக செய்து வந்தார். இந்நிலையில், நேற்றிரவு அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக தமிழ் சினிமாவின் பிரபலங்கள் தங்களது சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளனர்.

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் தனஞ்செயன் இளம் நடிகர் சேதுராமன் இறப்பு தனக்கு அதிர்ச்சி தருவதாக டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். மேலும் நடிகை அதுல்யா ரவி தனது டுவிட்டரில், அவரது இறப்பை நம்பவே முடியவில்லை இது பேரதிர்ச்சியாக இருக்கிறது என்று கூறியுள்ளார். இறக்க வேண்டிய வயதா இது அடகடவுளே என்று மாரடைப்பால் சேதுராமன் இறந்த செய்தியை வெங்கட் பிரவு பதிவு செய்துள்ளார்.

இளம் வயதில் நடிகர் இறந்த சம்பவம் சினிமா துறையினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.