விஜய் டிவியில் கலக்கும் நடிகர் தீபக்!! இன்று முதல் ஆட்டம் ஆரம்பம்!!

Photo of author

By CineDesk

விஜய் டிவியில் கலக்கும் நடிகர் தீபக்!! இன்று முதல் ஆட்டம் ஆரம்பம்!!

CineDesk

Actor Deepak mixes in Vijay TV !! The first game starts today !!

விஜய் டிவியில் கலக்கும் நடிகர் தீபக்!! இன்று முதல் ஆட்டம் ஆரம்பம்!!

சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் என்று கூறினாலே முதலில் நினைவுக்கு வருவது விஜய் தொலைக்காட்சி தான். தமிழகத்தில் தற்போது நம்பர் ஒன் என்டர்டைன்மென்ட் தொலைக்காட்சியாக விஜய் தொலைக்காட்சி உள்ளது. இந்த தொலைக்காட்சியின் சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களுக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

மேலும் விஜய் தொலைக்காட்சியின் சீரியல்களுக்கு அனைவருமே அடிமை என்று தான் கூற வேண்டும். தற்போது தொடர்ந்து ஒளிபரப்பாகி வரும் பாவம் கணேசன், செந்தூரப்பூவே, பாரதி கண்ணம்மா, ராஜா ராணி சீசன்2, நாம் இருவர் நமக்கு இருவர், காற்றுக்கென்ன வேலி போன்ற பல வெற்றி நாடகங்கள் ஒளிபரப்பாகி வருகிறது.

இதைத் தொடர்ந்து இன்று புதிதாக விஜய் தொலைக்காட்சியில் சீரியல் ஒன்று ஒளிபரப்பாக உள்ளது. அத்தொடரின் பெயர் தமிழும் சரஸ்வதியும். இதன் புரோமோ சில வாரங்களாகவே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலின் ப்ரோமோவிற்கு பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. மேலும் இந்த சீரியலில் பிரபல சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகர் தீபக் மற்றும் நடிகை நட்சத்திரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரமாக நடிக்கவுள்ளனர். மேலும் இந்த சீரியல் இன்று முதல் மாலை 7.30 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.