விடுதலை 2 திரைப்படத்தில் நடிகர் தினேஷ்!!! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!!

0
149
#image_title

விடுதலை 2 திரைப்படத்தில் நடிகர் தினேஷ்!!! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!!

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் தினேஷ் உள்ள புகைப்படம் இணையத்தில் வாயிலாக வருகின்றது.

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரி கதாநாயகனாகவும், நடிகர் விஜய் சேதுபதி முக்கியமான கதாப்பாத்திரத்திலும் நடித்து பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான விடுதலை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதையடுத்து உடனே விடுதலை திரைப்படத்தின் இரண்டாவது பாகத்திற்கான பணியை இயக்குநர் வெற்றிமாறன் அவர்கள் தொடங்கிவிட்டார்.

இதையடுத்து விடுதலை 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு சிறுமலையில் சில விரங்களுக்கு முன்னர் தொடங்கியது. தற்பொழுது சிறுமலையில் நடைபெற்று வந்த விடுதலை 2 திரைப்படத்தின் மூலம் படப்பிடிப்பு அங்கு பெய்து வரும் தொடர்பு மழையால் பாதிப்புக்குள்ளானது.

இதையடுத்து விடுதலை 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் தினேஷ் அவர்கள் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இயக்குநர் வெற்றிமாறன், நடிகை மஞ்சு வாரியர், நடிகர் தினேஷ் மூன்று பேரும் இருக்கும் புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விசாரணை திரைப்படத்தில் நடிகர் தினேஷ் நடித்திருந்தார். அதே போல இயக்குநர் வெற்றிமாறன் இயக்கிய அசுரன் திரைப்படத்தில் நடிகை மஞ்சு வாரியர் நடித்திருந்தார்.