விஜயகாந்த்துக்கு கை நழுவிப்போன ‘கன்னிப்பருவத்திலே’ படம் – பாக்யராஜ் ஓபன் டாக்!

0
586
#image_title

விஜயகாந்த்துக்கு கை நழுவிப்போன ‘கன்னிப்பருவத்திலே’ படம் – பாக்யராஜ் ஓபன் டாக்!

தமிழ் சினிமாவில் மக்களுக்காக இருந்த பிரபலங்களில் எம்.ஜி.ஆருக்கு அடுத்து விஜயகாந்த் தான் இருந்தார். சம்பாரிக்கும் பணத்தை தனக்கென்று வைத்துக்கொள்ளாமல் மக்களுக்காக செலவு செய்தார்.

முதன் முதலாக தமிழ் சினிமாவில் நடிகர் விஜயகாந்த் வில்லனாக நடித்த முதல்படமான “இனிக்கும் இளமை” படத்தில் அறிமுகமானார். இதனையடுத்து, அவர் ஹீரோவாக வைதேகி காத்திருந்தார். நீதியின் மறுபக்கம், குடும்பம், புதுயுகம், வீட்டுக்கு ஒரு கண்ணகி, நூறாவது நாள், சாட்சி, வெற்றி, சட்டம் ஒரு இருட்டறை, எங்கள் அண்ணா உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

தமிழ் மட்டுமல்லாமல், இந்தி, தெலுங்கு, மலையாளம் உட்பட மொழிகளில் நடித்துள்ளார். 1984ல் தமிழில் ஒரே ஆண்டில் 18 படங்களை வெளியிட்ட நடிகர் என்ற வரலாற்றை படைத்தார்.

ஒரு சேனலுக்கு இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் பேட்டி கொடுத்தார். அப்போது அவர் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில்,

பி.வி.பாலகுரு இயக்கத்தில், நானும், ராஜேஷ், வடிவுக்கரசி நடித்த படம் ‘கன்னிப் பருவத்திலே’. இந்தப் படத்தின் நான் நெகட்டிவ் கேரக்டரில் நடித்தேன்.

இப்படத்திற்கு மாடு பிடிக்கும் வீரராக விஜயகாந்த் நடித்தால் சரியாக இருக்கும் என்று நான் தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணுவிடம் விஜயகாந்தை அறிமுகம் செய்தேன். ஆனால், அதற்கு இயக்குநர் பாலகுரு, ராஜேஷை ஏற்கனவே பேசி வைத்துவிட்டேன். அதனால், விஜயகாந்த்திற்கு இப்படத்தில் நடிக்க வாய்ப்பு இல்லை என்று கூறிவிட்டார். அப்படி இந்த படத்தில் விஜயகாந்த் நடித்திருந்தால் இப்படம்தான் விஜய்காந்திற்கு அறிமுக படமாக இருந்திருக்கும். இப்படம் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்தது. 100 நாட்கள் கடந்து இப்படம் மக்களின் அமோக வரவேற்பு பெற்றது என்றார்.

author avatar
Gayathri