அக்டோபர் 19 ஆம் தேதி வெளிவரும் LUC பற்றிய அப்டேட் கொடுத்த நடிகர்!! உற்சாகத்தில் ரசிகர்கள்!!
விஜய் முதலில் தமிழ் சினிமாவில் அறிமுனார். இவர் பல வெற்றி படத்தில் நடித்துள்ளார். மேலும் இவருக்கு தமிழ்நாடு மட்டுமின்றி உலக அளவிலும் ரசிகர் கூட்டம் உள்ளது. தற்போது விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். அதற்கு அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
திரைப்படம் அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தயாரித்து வருகிறார். இதனையடுத்து வெளிவரவிருக்கும் விஜய்யின் 68-வது திரைப்படம் குறித்து ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்புகள் எழுந்துள்ளது.இதை வெங்கட் பிரபு தயாரிக்க உள்ளார்.
தற்போது இந்த படத்தில் நடிக்கவிருக்கும் நடிகரின் பெயர் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் ஏற்கனவே நடிகர்கள் சஞ்சய்தத், திரிஷா, அர்ஜூன், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான், நடன இயக்குநர் சாண்டி மாஸ்டர், இயக்குநர்கள் கவுதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. இந்நிலையில் லியோ திரைப்படத்தின் முதல் பாடலான நா ரெடி பாடல் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.
. இந்நிலையில் நடிகர் தனுஷ் அவர்கள் லியோ திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடிப்பதாக தகவல்கள் பரவி வந்தது. லியோ திரைப்படத்தில் நடிகர் தனுஷ் அவர்களை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைத்து விட்டது.
இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் அர்ஜுன் தாஸ் யாருக்கு என்ன கதாபாத்திரம் என்ன வேலை என்று எனக்கு அனைத்தும் தெரியும் என்றும் குறிப்பிட்டார். மேலும் லியோ படம் யாரும் எதிர்பாக்காத விதமாக பெரிய அளவிலான இன்ப அதிர்ச்சி இருக்கும் என்றும் , தியேட்டர் வெடிக்கும் என தெரிவித்தார். மேலும் ஒருவர் நீங்கள் லியோ படத்தில் நீங்கள் இருகிறீர்களா என்று கேட்டார். அதற்கு பதில் அளித்த இவர் அக்டோபர் 19 தியேட்டரில் தெரிந்து கொள்வீர்கள் என தெரிவித்துள்ளார்.

