வெண்ணிலா கபடி குழு புகழ் நடிகர் ஹரி வைரவன் உடல் நலவு குறைவு காரணமாக காலமானார்!

Photo of author

By Anand

வெண்ணிலா கபடி குழு புகழ் நடிகர் ஹரி வைரவன் உடல் நலவு குறைவு காரணமாக காலமானார்!

வெண்ணிலா கபடி குழு’ ’குள்ளநரி கூட்டம்’ ’நான் மகான் அல்ல’ உள்ளிட்ட சில படங்களில் துணை நடிகராக நடித்தவர் நடிகர் ஹரி வைரவன். இவர் ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தில் சூரியுடன் சேர்ந்து காமெடி வேடத்தில் நடித்து இருந்தார் என்பதும், குறிப்பாக புரோட்டா கடை காட்சியில் இவரது நடிப்பு அனைவரையும் கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ஹரி வைரவன் நேற்று இரவு 12 மணிக்கு உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.நடிகர் ஹரி வைரவன் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு சில ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்திருந்தார்.அவரது கை கால்களும் வீங்கியதாக கூறப்படுகிறது.இந்த நிலையில் நடிகர் ஹரி வைரவன் அவர்களின் இரண்டு கிட்னியும் செயலிழந்து மேலும் அதற்கான சிகிச்சை பெற்றுவந்தார்.

ஹரி வைரவன் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவலறிந்து, திரையுலகத்தினர் பலரும் அவருக்கு உதவிகரம் நீட்டிவந்தனர். இந்த நிலையில் இன்று நடிகர் ஹரி வைரவன் உடல்நிலை மோசமான நிலையில் இன்று அதிகாலை 12 மணி அளவில் உயிரிழந்துள்ளார்.இந்த செய்தி திரையுலகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.ரசிகர்கள் மற்றும் திரையுலக நடிகர் நடிகைகள் என பலரும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.