தளபதி வீட்டில் நள்ளிரவு அதிரடி சோதனை! திடீரென நடந்த பரபரப்பு சம்பவம்.!!

Photo of author

By Jayachandiran

சென்னை சாலிகிராமத்தில் இளைய தளபதி விஜய் அவரது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த மர்ம நபர் ஒருவர், விஜய் வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளதாக கூறி அழைப்பை துண்டித்தார்.

இதையடுத்து காவல்துறையினர் வெடிகுண்டு நிபுணர்களுடன் நடிகர் விஜய்யின் வீட்டிற்கு உடனடியாக சென்று சோதனை நடத்தப்பட்டது. இந்த நள்ளிரவு சோதனையில் வெடிகுண்டு இருப்பதற்பான எந்த தடயமும் கிடைக்கவில்லை. மேலும் இது ஒரு புரளி என்றும் உறுதியானது.

காவல்துறை விசாரணையில் விழுப்புரத்தை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு வைத்துள்ளதாக பேசியது தெரியவந்தது. இதற்கு முன்பு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டிலும் மன நலம் பாதித்த ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து பரபரப்பை ஏற்படுத்திய சம்பவமும் குறிப்பிடத்தக்கது.