பவன் கல்யாண் அவரோட தம்பி அப்படினு எனக்கு அப்போ தெரியாது! நடிகர் ஹூசைனி பேட்டி!

0
623
Actor Hussaini interviewed I dont know that Pawan Kalyan was his brother
#image_title

நடிகரும் ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண் அவர்கள் பிரபல நடிகர் ஒருவருடைய தம்பி என்பது தெரியாது என்று நடிகர் ஹூசைனி அவர்கள் வாழ்க்கையில் நடந்ததை பற்றி கூறியுள்ளார்.

தற்பொழுது நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஆந்திர மாநிலத்தில் தான் போட்டியிட்ட 21 தொகுதிகளிலும் வெற்றி பெற்று ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண் அவர்கள் அனைவராலும் பேசப்பட்டு வருகிறார். ஜனசேனா கட்சித் தலைவராக இருக்கும் பவன் கல்யாண் அவர்கள் மிகப் பிரபலமான நடிகர் ஆவார். இவர் தனக்கென தனியாக பல லட்சக்கணக்கான ரசிகர்களை வைத்துள்ளார். இந்நிலையில் நடிகரும் ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண் குறித்து யாருக்கும் தெரியாக தகவல் ஒன்றை நடிகரும் கராத்தே மாஸ்டருமான ஹூசைனி அவர்கள் பகிர்ந்துள்ளார்.

நடிகர் பவன் கல்யாண் அவர்கள் குறித்து நடிகர் ஹூசைனி அவர்கள் “பவன் கல்யாண் என்னுடைய மாணவர். அவர் எனக்கு டீ போட்டு கொடுத்துள்ளார். இங்கே இருக்கும் இடத்தை எல்லாம் சுத்தம் செய்வார். அவர் என்னிடம் கராத்தே கற்றுக் கொள்ள வந்தார்.

அவர் வந்த சமயம் நான் கராத்தே கற்றுக் கெடுப்பதை நிறுத்திவிட்டு செக்யூரிட்டி ஏஜென்சி நடத்தி வந்தேன். அவரு ஒரு மாதம் முழுவதும் வெளியில் நின்று கொண்டிருப்பதை பார்த்து நானாக அவரை அழைத்து அவருக்கு கராத்தே கற்றுக் கொடுத்தேன். பவன் கல்யாண் அவர்கள் என்னிடம் கராத்தே கற்றுக் கொள்ள தொடங்கி மூன்று மாதம் கழிந்து தான் அவர் நடிகர் சிரஞ்சீவி அவர்களின் தம்பி என்பதே எனக்கு தெரிய வந்தது.

அதுக்கு அப்புறமா பவன் கல்யாண் அவர்கள் என்னிடம் சிறப்பாக கராத்தே கற்றுக் கொண்டார். பின்னர் கராத்தேவில் பிளாக் பெல்ட் எல்லாம் வாங்கினார். இது போன்ற காட்சிகள் பதிரி திரைப்படத்திலும் வந்தது” என்று கூறினார்.

பத்ரி திரைப்படம் தமிழில் நடிகர் விஜய் நடித்து வெளியாவதற்கு முன்னரே தெலுங்கில் நடிகர் பவன் கல்யாண் நடிப்பில் 2000வது ஆண்டில் வெளியானது. இந்த திரைப்படம் இயக்குநர் பூரி ஜெகந்நாத் அவர்களின் முதல் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் அப்பொழுது மாபெரும் வெற்றி பெற்று பிளாக்பஸ்டர் திரைப்படமாக மாறியது.

அதன் பின்னர் இந்த திரைப்படம் தமிழில் பத்ரி என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு 2001ம் ஆண்டில் வெளியானது. தமிழில் வெளியான பத்ரி திரைப்படத்தில் நடிகர் விஜய் அவர்களின் பயிற்சியாளராக நடிகர் ஹூசைனி அவர்களே நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Gayathri